பக்கம்:வைணவ உரைவளம்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 || 0 வைணவ உரைவளம் வயிற்றினை வளர்ப்பவர்கள், உத்தமர்களான பாகவதர் கட்கு என்ன காகியத்துக்கு உறுப்பாவர்?' என்கின்றார். 'உத்தமர்க்கு என் செய்வாரே? : எப்போதும் பகவத் குணங்களை அநுசந்தித்துக்கொண்டு வளர்ந்து வடிந்த சரீரங்களையுடைய பூர் வைணவர்கட்கு ஒருவருக்கொருவர் உணர்த்திக் கொள்வதற்குப் பகவத் குணரனுபவத்திலே தகாத துணையாக இருக்கப் போகிறார்களோ? இங்கே கம்பிள்ளை ஈடு : :ஜன்மத்துக்குப் பிரயோ ஜனம் வைணவர்களுக்கு உறுப்பாமதுவே யென்றிருக் கிறார். ஈசுவரன் தன்னையும் தன் விபூதியையும் ததிய2" சேஷமாக்கியிறே வைப்பது' என்பது. இங்கே ஓர் இதிகாசம் : கூரத்தாழ்வானும் பெரிய நம்பியும் சோழ ராஜ சபைக்கு எழுந்தருளி சிவாத் பரதரம் நாஸ்தி" (சிவாத-சிவத்தைக் காட்டிலும்; பரதரம்-மேலானது: நாஸ்தி-இல்லை) என்றதற்கு த்ரோண மஸ்தி தத; பரம்" (தத-அக்குருனி என்னும் முகத்தல் அளவையைக் காட்டி லும்; பரம்-மேலானதாய்; த்ரோணம்-பதக்கு என்னும் முகத்தல் அளவை: அஸ்தி இருக்கிறது) என்று கையெழுத் திட்டபோது பெரிய நம்பிக்கு ப்ராணாந்தமான ஆபத்து நேர்ந்தது. ஆழ்வான் மடியிலே சாய்ந்து கிடக்கச் செய்தே, பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார். அப்போது சிலர் அநாதப் பிரேத சம்ஸ்காரம் (தகனம் செய்தல்) செய்து ஸ் க்ருதம் பெறலாமென்றெண்ணி அவ்விடத்தே வந்து பார்க்கையில், ஆங்கு ஆழ்வான் எழுந்தருளியிருப்பது கண்டு தங்களுக்கு அங்குக் காரியம் ஒன்றுமில்லாமை யுணர்ந்து திரும்பிப்போகையில்,ஒருவரையும் குறை சொல்வி யறியாத கூரத்தாழ்வான் அவர்களை நோக்கி இங்கனம் கூறினராம்; பயல்களே, வைணவனுமாய் ஒருவனுமில்லா தான் ஒருவனைத் தேடிப் பிரதிபத்தி பண்ணப் பார்க்கின் 20. ததீயர்-அடியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/333&oldid=921051" இலிருந்து மீள்விக்கப்பட்டது