பக்கம்:வைணவ உரைவளம்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 3 13 உத்தேச்யமென்பது GuñĞuurrrfas@iflair கொள்கை, *வைணவர்களுடைய விஷயீகாரத்தினும் வைணவர்க ளல்லாதார் இகழுகையே புருஷார்த்தமென்பது கருத்து' என்றார் நஞ்சியரும் ஒன்பதினாயிரம் படியில். விபீஷணாழ் வான் இராம கோஷ்டியில் தனக்கு விஷயீகாரம் கிடைக்கா மற் போனாலும் அரக்கர் திரளில் தனக்குத் திரஸ்காரம் கிடைத்ததே பரம பாக்கியம் என்று நினைப்பது போன்றிருந்தது. இங்கு ஓர் இதிகாசம் : ஈட்டில் மிளகாழ்வான் வார்த்தை" என்று வருகின்றது. அரசன் பலபேர்களுக்குக் கிராம பூமிகள் தானம் செய்வதாக மிளகாழ்வான் கேள்விப் படுகின்றான். இவனும் தானம் பெறச் செல்லுகின்றான். அவனைப் பார்த்து, உனக்கு தானம் கொடுப்பதில்லை' என்று அரசன் சொல்ல, அது கேட்ட மிளகாழ்வான், * பிரபுவே, எனக்கு மாத்திரம் கொடுக்க முடியாதென் கைக்குக் காரணம் என்ன? வேதமோ சாத்திரமோ எதில் தேர்வு வைத்தாலும் நான் தேர்வு கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்' என்கின்றான். இதனைச் செவிமடுத்த அரசன், உமக்கு அந்த யோக்கியதைகள் இல்லை என்று நான் சொல்ல வில்லை' என்கின்றான். உடனே மிளகாழ் வான், ஆனால் ஏன் தானம் கொடுக்க மாட்டேன் என்கின்றாய்?' என்று கேட்க, அரசன் :நீர் ஹீ வைஷ்ணவ ராகையாலே உமக்குக் கொடுக்க நான் விரும்புகின்றி லேன்: என்று மறுமொழி தருகின்றான். உடனே மிளகாழ்வான் பரமானந்தம் அடைந்து கூத்தாடுகின்றான். வைணவத்துவம் ஏதுவாக அந்த அவைணவன் கைவிட்டது தானே தமக்குப் பரம புருஷார்த்தமா யிருந்ததாகக் கருது கின்றான். பிறர் கூற என்ற சொற்றொடரின் அழுத்தம் தான் இந்த இதிகாசத்திற்குக் காரணம் என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/336&oldid=921056" இலிருந்து மீள்விக்கப்பட்டது