பக்கம்:வைணவ உரைவளம்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 வைணவ உரை வளம் 147 தோற்றக் கேடவை யில்ல வனுடை யான வன்ஒரு மூர்த்தியாய்ச் சீற்றத் தோடருள் பெற்ற வன்அடிக் கீழ்ப்புக நின்ற செங்கண்மால் காற்றத் தோற்றச் சுவையொ லிஉறல் ஆகி நின்றளம் வானவர் ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை யானி லேன் எழு மைக்குமே2" (தோற்றம்-பிறப்பு: கேடு-இறப்பு: இல்லவன் இல்லாதவன்; உடையான்-உடையவன்; ஒரு மூர்த்தி-ஒப்பற்ற நரசிங்க மூர்த்தி; சீற்றத்தோடு-சீறியிருக்கும் நிலைமையிலே: அருள்-கருணை; உறல் - ஊற்றுணர்ச்சி; வானவர் எறு-தேவாதி தேவன்; எழுமைக் கும்-எல்லாக் காலத்திலும்; யான் இலேன்யான் புகலாக உடையேன் அல்லேன்) மமகாரங்கள் அற்றபடியைக் கூறினவாறு, அர்ச்சாவதாரமே எளிது’ எனக் கூறும் திருவாய்: மொழியில் ஒரு பாசுரம் இது. இதில் ஆழ்வார் பிறப்பு: இறப்பு என்பவை இல்லாதவன் தோற்றக் கேடுகளை யுடைய பொருள்களையெல்லாம் தனக்கு உடைமையாக உடையவன் கர்மமடியாக வரும் பிறவியில்லாதவன், ஒப்பற்ற நரசிங்க உருவமாகிச் சீற்றத்தோடு இருக்குங் காலத்தில் திருவருளைப் பெற்றவனான பிரகதாழ்வான் திருவடிகளிலே அணையும்படியாக நின்ற சிவந்த கண்களை யுடைய மால், நாற்றம் உருவம் சுவை ஒலி ஊறு இவை: யாகின்ற எம் வானவர் ஏறு ஆகிய இறைவனையேயன்றிக் 25. திருவாய் 3.6;6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/337&oldid=921058" இலிருந்து மீள்விக்கப்பட்டது