பக்கம்:வைணவ உரைவளம்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 i 6 வைணவ உரை வளம் (துயரம்-பரிதாபம்; அவன் அல்லனாய்-அவற் றுக்குத் தான் வசப்படாதவனாய்:அயர வாங் கும்-மோகிக்கும்படி உயிரை அபகரிக்கின்ற: நமன்தமர்க்கு-யமபடர்களுக்கு: அரு-மீட்க முடியாத, தஞ்சம்-பற்றுக்கோடு.1 'அர்ச்சாவதாரமே எளிது’ எனக் கூறும் திருவாய் மொழியில் ஒரு பாசுரமாகும் இது. இதில் ஆழ்வார், *துன்பத்தையே தரும் பாவங்களும் புண்ணியங்களுமாய், அவை அல்லாதவனுமாய், உயர்ந்து நின்றதாய் ஒப்பற்றதா யுள்ளதே தேஜோ ரூபமான திருமேனியையுடையவனாய், ஏழு உலகங்களையும் உண்டுஉமிழ்ந்தவனாய், மயங்கும்படி யாக உயிரைக் கொள்ளுகின்ற ய ம)படர்க்குப் போக்குதற் கரிய விஷயமாயிருப்பவனாய், தன்னையடைந்தவர்களை நழுவ விடாதவனாயுள்ள சக்கரவர்த்தித் திருமகனை அயல்லாமல் தஞ்சமாக வேறு ஒருவரை உடையேன் அல்லேன்' என்கின்றார். 'அன்றி,மற்று இலேன் தஞ்சமாகவே'; இவ்விடத்தை பட்டர் அருளிச் செய்யும்போது, நஞ்சீயர் இவர் புக்க இடம் எங்கும் இப்படியே சொல்லுவார்; இவர்க்கு இது பணியே யன்றோ?' என்ன, இவர் மற்றோர் இடத்தில் தலை நீட்டுவது பாவநத்வத்தைப்2சி பற்ற, இவர் தஞ்சமாக28 நினைத்திருப்பது சக்கரவர்த்தித் திருமகனையே’ என்று அருளிச் செய்தார். பட்டர் இராமாவதாரத்தில் பட்ச பாதத்தாலே அருளிச் செய்யுமது கேட்கைக்காக, சிறியாத்தான் பெருமாளுக்கு3" எல்லா ஏற்றங்களும் அருளிச் செய்ததேயாகிலும், பாண்ட வர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டித் துTதுபோன 28. பாவனத்வம்-பரிசுத்தமாம் தன்மை, 29. தஞ்சமாக-போக்கியமாக; 30. பெருமாள்-இராமன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/339&oldid=921062" இலிருந்து மீள்விக்கப்பட்டது