பக்கம்:வைணவ உரைவளம்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 வைணவ உரைவளம் T. 49 ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னை தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம் மான்தன்னைத் தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்கண்டீர் நாளும் பிறப்பிடை தோறுஎம்மை யாளுடை காதரே." (ஆளும்-ஆள்கின்ற, ஆரு-திருவாழியாழ்வானை யுடைய, பிரான்-உபகாரகன்; தூமணிபரிசுத்தமான நீலமணி, தாள்-கால், நாதர் -தலைவர்) அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர்" எனக் கூறும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், ஆளுகின்ற மேலானவனை, கண்ணபிரானை சக்கரத்தைத் தரித்த உபகாரத்தை உடையவனை,ஒப்பற்ற நான்கு தோள்களையுடைய பரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தையுடையவனான எம்பெருமானைத் தாளும் தடக்கையும் கூப்பி வணங்குகின்ற அவர்கள்தாம் பிறப்புகள்தோறும் எப்பொழுதும் எம்மை அடிமையாக வுடைய தலைவர் ஆவர்' என்கின்றார். தோளு மோர் நான்குடை பட்டர் திருக்கோட்டியில் எழுந்தருளியிருக்கும்போது அனந்தாழ்வான் திருத்தலப் பயணமாக அங்கு எழுந்தருளினர்; அப்போது பட்டரை நோக்கி பரமபதத்தில் எம்பெருமான் நாற்றோளனாய் எழுந்தருளியிருக்கின்றானோ? இருதோளனாய் எழுந்தருளி யிருக்கின்றானோ?' என்று கேட்க எல்லாம் அறிந்த 35. திருவாய். 3.7:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/341&oldid=921068" இலிருந்து மீள்விக்கப்பட்டது