பக்கம்:வைணவ உரைவளம்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 3岔督 [நாதனை-சுவாமியை; ஞாலம்-பூமி, பொன்அழகிய நெடு-நீண்ட பாதம்-திருவடி: பணிய-வணங்க; பணியும்-வணங்கும்; ஓதும் பேசப்படுகின்ற; ஆள் உடையார்-அடிமை கொள்பவர்கள், ! இது நம்மாழ்வார் திருவாய்மொழியிலுள்ள ஒரு பாசுரம். பாகவதசேஷத்துவத்தைக் கூறுவது, இதில் *ன்ம்பெருமானுடைய தோளும் தோள் மாலையுமான அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கு பக்தரா யுள்ளவர்கள் எனக்கு சுவாமிகள்' என்கின்றார். அதாவது, "தலைவனை, பூமியும் தெய்வ உலகமும் ஏத்து கின்ற நறுமணம் பொருந்திய திருத்துழாய் மலரைத் தரித்தவனை அழகிய நீண்ட திருவாழியை வடைய எந்தையை, எல்லார்க்கும் உபகாரகனைப் பாதங்களை வணங்குகின்ற அடியார்களை வணங்குகின்ற அடியார்கள் தாம் பேசப்படுகின்ற பிறப்புகளியெல்லாம் எம்மை அடிமை கொண்டவர்களாவார்கள்' என்கின்றார். பாகவதசேஷத்துவம் அருமையிலும் அருமை என்ப தற்கு இப்பாசுரத்தை விளக்கும் ஈட்டுரையில் ஓர் ஐதிக முள்ளது. பிள்ளையாத்தான் என்பவர் ஆசாரிய நிலையி லுள்ளவர். இவர் இல்லறத்திலுள்ள ஆசாரியர்களிடத்தில் பணிந்திருந்து பொருள் சிறப்புகளை அறியத் திருவுள்ளம் இல்லாதவர். இவர் ஒருநாள் நஞ்சீயர் பக்கலில் வந்து, *அடியேனுக்குத் திருவாய்மொழி ஓர் உரு அருளிச் செய்ய வேண்டும்’ என்று விண்ணப்பித்தார். இதனைக் கேட்ட நஞ்சீயர் நம்பிள்ளை பக்கலில் கேட்டால்தான் தமக்கு விளக்கமாகத் தெரியும்; அங்கே சென்று கேளும்' என்று அருளிச் செய்ய, அதுகேட்ட இவர், 'நம்பிள்ளை யிடத்தில் கேட்பதனால் அவரை நான் தண்டச் சமர்ப்பிக்க வேண்டிய தாகுமே; அதனைத் தவிர்க்க வேண்டுமென்றுதான் சுவாமி பக்கலில் பிரார்த்திக்கின்றேன்' என்கிறார். இதுகேட்ட வை.--21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/344&oldid=921073" இலிருந்து மீள்விக்கப்பட்டது