பக்கம்:வைணவ உரைவளம்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 வைணவ உரைவளம் சேஷத்துவம் நமக்குப் போதும்' என்றெண்ணி முடித் தாரல்லர் என்றவாறு.

இப்படி வைணவர்களை விரும்பினால் இது லெளகி. கரோடு சேராதிருந்ததாகில் ஆழ்வார் விரும்பினதை விச்வளித்தோமாகினறோம் என்று நஞ்சியர் அருளிச் செய்வர்'-என்பது ஈடு முப்பத்தாறாயிரம். இதன்கருத்து. யாதெனில்: இந்தப் பதிகத்தில் ஆழ்வார் அருளிச் செய்த படியே நாம் அநுட்டிப்பதாகக் கொண்டால் லோகவிருத்த மாகுமே: எத்தனை நலந்தானிலாத சண்டாளசண்டாளர் களாகிலும் (3. 7:9.) இத்யாதிகளால் அருளிச் செய்யப் பெறுகின்ற அர்த்தம் லோகாதுட்டானத்திற்கு அமையாதே என்கின்ற சங்கையின்மீது அருளிச் செய்கிறபடி. நாம் அநுட்டிக்கும்படியான பாக்கியம் பெறாதொழியினும்: இேங்ங்னே ஆழ்வார் பாரித்திருந்தார்’ என்று விச்வாஸ்த். தோடே அநுசந்தித்தாலும் போதும் என்றபடி.

152 உளனாக வேஎண்ணித் தன்னையொன் றாகத்தன் செல்வத்தை வளனா மதிக்குமிம் மானிடத் தைக்கவி பாடியென் குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே உளனாய எந்தையை எங்தைபெம் மானை ஒழியவே44 (உளன்.ஆய்.சத்தானவனாக; ஒன்று-ஒருபொருள்: எண்ணி-நினைத்து; வளனா-மேம்பாடாக: மதிக்கும்-எண்ணியிருக்கும்; மானிடம்-அற்ப =ത്ത-l-l-l. 44. திருவாய். 3. 9, 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/347&oldid=921079" இலிருந்து மீள்விக்கப்பட்டது