பக்கம்:வைணவ உரைவளம்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 329 பட்டவராய் இருப்பது போன்று, ஐம்புல இன்பங்களில் ஈடுபட்டவராய் அவற்றினுடைய பேறு இழவுகளே லாபா லாபமாம்படி இருந்தார்கள்; அதனைக் கண்டவாறே, வாளேறு காணத் தேளேறு மாய்ந்தாற்போலே,2 தம் இழவை மறந்தார்; இவர்களுடைய துக்கமே நெஞ்சில் பட்டது; உடனே எம்பெருமானை நோக்கி, பிரானே, இவர்களை இப்படித் துடிக்கவிடலாமா? நீ சர்வேசுவ ராய்ப் பேர் அருட்கடலாய்ச் சம்பந்தமுள்ளவனுமாய் இவர்களின் கிலேசம் அறிந்து போக்குவதற்குத் தக்க ஞான சக்திகளை யுடையையுமாயிருக்க, இவர்கள் இங்ங்னம் கிடந்து நோவு படுகை போருமோ? இவர்களைக் கரை மரம் சேர்க்க வேண்டும்" என்று அவன் திருவடிகளைப் பிடிக்க, எம்பெருமான், இவர்களை அசேதனங்களாக நான் எப்படிக் கொள்ள முடியும்? இவர்கள் உண்டி உடை முதலானவற்றைக் கொள்ளாமலில்லை; அவற்றிலே நல்லன. வற்றையும் தீயனவற்றையும் ஆராய்ச்சி செய்ய வல்லவர்க ளாயு மிருக்கின்றனர்; அப்படிப்பட்ட இவர்கள் விஷயாந் திரங்களைக் காட்டிலும் நம்முடைய வாசியை அறியாதே இருந்தார்களே யன்றால், இவர்கள் தொலைந்து போகிற படியே தொலைந்து போகட்டும் என்று கைவிடுவது தவிர வேறு நம்மால் செய்யலாவதுண்டோ? இப் பாவிகளைப் பற்றின கவலையை விட்டிடும்' என்று சமாதானம்செய்ய, அது கேட்ட ஆழ்வார், பிரானே, ஆகில் இப்படிப்பட்ட வர்களின் நடுவே என்னை ஏன் வைத்திருக்கின்றாய்? இவ் விடத்தில் நின்றும் என்னை முன்னம் வாங்க வேண்டும்' என்ன, எம்பெருமான், ஆழ்வீர், உம்மை முன்னமே வாங்கி விட்டேன் காணும்; சம்சாரிகளோடு பொருந்தாத படி உம்மைச் செய்து வைத்திருக்கின்றேன் அல்லவா? இவ் :வுலக யாத்திரையைச் சிந்தித்ததனால் உமக்குண்டான 2. வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற்போலே" (இறை. களவியல். சூத் 2. உரை காண்க.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/352&oldid=921091" இலிருந்து மீள்விக்கப்பட்டது