பக்கம்:வைணவ உரைவளம்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33() வைணவ உரைவளம் கிலேசமெல்லாம் தீரும்படி ஒன்று காட்டுகின்றேன், காணும்' என்று சொல்லிப் பரமபதத்தில் அயர்வறும் அமரர்கள் அடிமை செய்யப் பெரிய பிராட்டியாரும் தாமுமாக இருக்கின்ற இருப்பைக் காட்டிக் கொடுக்க, ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே கிலாநிற்பக் கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன்.உன் திருவடியே. (4.9:10) என்று அநுசந்தித்துத் தரித்துக் கிருதார்த்தராய்த் தலைக் கட்டுகின்றார் என்பதாம். ஆழ்வாருடைய பேர் அருளைக் குறிக்கும் இந்த நிர்வாகம் பரம தயாளுவான ஆழ்வான் தன்மைக்குச் சேரும் என்பதற்கு ஓர் ஐதிகம் காட்டுவர் ஈட்டாசிரியர்; ஆழ்வான் ஓரிடத்தே வழிபோகா நிற்க ஒரு பாம்பினாலே பிடிக்கப் பட்ட தவளை கூப்பிடா நிற்க, இது யார் அறியக் கூப்பிடு கின்றதோ?’ என்று மோகித்தாராம். அரவவாய்க் கோட்பட்ட மண்டுக ஒலி கேட்டு மதியெல்லாம் உள்கலங்கி, மயங்கி நின்ற பெருமானார்' என்று பின்புள்ளாரும். பேசினார்கள். 155 கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா எண்ணில பல்க லன்களும் ஏறும் ஆடை யும்.அஃதே கண்ணி மூவுல கும்,ந விற்றுங் கீர்த்தியும் அ.தே கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.8 .അബ് 3. திருவாய். 4.3.5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/353&oldid=921093" இலிருந்து மீள்விக்கப்பட்டது