பக்கம்:வைணவ உரைவளம்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய் மொழி $$5 அடியிட்டுப் பெரிய திருவடியின் மீது ஏறும்படி இது வன்றோ?' என்று சொல்லி மோகித்தாராம். ஒரரசனைக் கண்டு அவர் பின்னே தொடர்ந்து போனார் என்று சொல் வதும் உண்டு. அரசன் தன் சேனையோடே கங்கை கொண்ட சோழபுரத்து ஏறப் போகச் செய்தே, பெரிய முதலியார் மன்னனார் திருவடிகளில் சேவித்திருக்கும் போது, ஒரு பெண் பிள்ளை வந்து, நம் அகத்திலே ஒரு குரங்கும் இரண்டு வில்லிகளும் ஒரு பெண்ணுமாக வந்து புகுந்தார்கள்' என்று சொன்னபொழுது, பெருமாளும் இளைய பெருமாளும் பிராட்டியும் ஐந்திர வியாகரண பண்டிதனும்' என்று புத்தி பண்ணிப் பின் தொடர்ந்து போய், முன்னே போகின்றவர்கள் போகின்றார்கள், போகின்றார்கள்' என்று கேட்டுக் கீழை வாசலில் சென்ற பொழுது இப்படிப் போகின்றவர்களைக் கண்டீர்களோ என்று கேட்க, அவர்கள் கண்டிலோம்" என்ன, அதுவே காரணமாக திருநாட்டிற்கு எழுந்தருளினார். 158 விரும்பிப் பகவரைக் காணில், "வியலிடம் உண்டானே" என்னும்; கரும்பெரும் மேகங்கள் காணில் 'கண்ணன்' என்று ஏறப் பறக்கும்; பெரும்புல ஆகிரை காணில் பிரானுளன்' என்றுபின் செல்லும்; அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே!" 6. பெரிய முதலியார்-நாதமுனிகள்; 7. மன்னனார்-காட்டு மன்னார் கோயில் என்ற ஊரி லுள்ள திருமால் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான். 8. ஐந்திர வியாகரண பண்டிதன்-அநுமன். 9. திருவாய். 4. 4:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/358&oldid=921104" இலிருந்து மீள்விக்கப்பட்டது