பக்கம்:வைணவ உரைவளம்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 337 பார்க்கப் புறப்பட விடலாமோ? என்றான். மேகத்தைத் கண்டு பகவானாகவே எண்ணி மோகித்து விழுதல் பக்தர் களுக்கு உள்ளதென்று இதனால் விளங்குகின்றது. இவ்விடத்தில் பெரிய திருவந்தாதியிலுள்ள, கொண்டால்தான் மாலவரைதான் மா கடல்தான் கூர்இருள்தான் வண்டுஅறாப் பூவைதான் மற்றுந்தான கண்டகாள் கார்உருவம் காண்தோறும் கெஞ்சுஓடும்-கண்ணனார் பேர்உருளன்று எம்மைப் பிரிந்து.' பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவிமலர் என்றும் காண்தோறும் பாவியேன் மெல்ஆவி மெய்மிகதே பூரிக்கும்-அவ்வவை எல்லாம் பிரான்உருவே என்று.' என்ற இரு பாசுரங்களும் அநுசந்தேயம். 159 அயர்க்கும்; சுற்றும் பற்றிநோக்கும் அகலவே நீள்நோக்குக் கொள்ளும்: வியர்க்கும்; மழைக்கண் துளும்ப, வெவ்வுயிர்க் கொள்ளும், மெய்சோரும்: AASAASAASAASAASAASAAAS 10. பெரிய திருவந். 49; 11. டிெ. 73 வை.-22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/360&oldid=921109" இலிருந்து மீள்விக்கப்பட்டது