பக்கம்:வைணவ உரைவளம்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி $3零 16O நமக்கும் பூவின்மிசை கங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண்தாமரை சுமக்கும் பாகப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர்கிகர் அகல்வா னத்தே.43 (நமக்கும்-சம்சாரிகளான நமக்கும்; நங்கை பெரிய பிராட்டியார்; இன்பன்-இன்பம் அளிப்பவன்; ஞாலத்தார்-லீலா விபூதியில் உள்ளவர்கள்; வானத்தவர் - பரமபத வாசிகள்; பெருமான்-தலைவன்: பாதம்திருவடிகள், சொல்லும் ஆறு-சொல்லும் படியாக அமைக்க வல்லேற்கு-அமைதிய யைப் பெற்ற எனக்கு: அகல் வானம்-அகன்ற தித்திய விபூதி: நிகர்-ஒப்பாவார்.1 எம்பெருமான் இருப்பைக் கண்டு இன்புற்றல்' பற்றிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம் இது. இதில் ஆழ்வார், தேன்திருவடிகளை இன்று வந்து பற்றிய சம்சாரிகளாகிய நமக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பெரியபிராட்டி யாருக்கும் இனியவனானவனும், பூவுலகிலுள்ளவர்கட்கும் நித்திய சூரிகட்குத் தலைவனும், குளிர்ந்த தாமரை மலராலே சுமக்கப்படுகின்ற திருவடிகளையுடைய பெரு மானுமான சர்வேசுவரனைச் சொல்மாலைகள் சொல்லும் படியாகத் தரிக்கவல்ல எனக்குப் பரமபதத்திலேயுள்ள நித்தியசூரிகளுக்குள் இனி ஒப்பாவார் யாவர்?' என் கின்றார். 13. திருவாய் 4.5:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/362&oldid=921114" இலிருந்து மீள்விக்கப்பட்டது