பக்கம்:வைணவ உரைவளம்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 3 49. 164. உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாளவ னையல்லால் நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்! மன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி மன்னனை, ஏத்துமின் ஏத்துத லும்தொழு தாடுமே.2" (உன்னித்து-நினைத்து; தொழாள்-தொழுவது இல்லை; நும் இச்சை-உங்களுடைய மனம் போனபடியே; மன்னப்படும் - நித்தியமாக விளங்குகின்ற; மறைவாணன் - வேதங்களி னால் போற்றப்படுபவன்; ஏத்துமின்-துதி யுங்கள்: ஆடும்-களித்துக் கூத்தாடுங்கள், ! தோழி பாசுரம் : வெறிவிலக்கு என்ற அகத்துறையில் அமைந்த திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். ஆழ்வார் தாமான தன்மையை இழந்து ஒரு தலைமகள் நிலைமையை எய்தி, அது தன்னிலும் தம் வாயாலே சொல்லமாட்டாமல் வேற்று வாயாலே சொல்ல வேண்டித் தோழியின் பேச் சாகச் செல்லுகின்றது இப் பாசுரம். தலைவனின் பிரிவாற்றாது மிக வருந்திய தலைமகளது வடிவ வேறுபாட்டினைக் கண்ட தாய்மார்கள் இவள் இங்ங்னம் மெலிவதற்குக் காரணம் என்னோ?’ என்று கவலைப்பட்டுக் கட்டுவிச்சியைக் குறிகேட்க, அவளும் தன் மரபின்படி ஆய்ந்து இவளுக்கு முருகக் கடவுள் ஆவே சித்த தொழியப் பிறிதொன்றுமில்லை" என்று கூற அது கேட்ட தாயர் உடனே வெறியாட்டாளனை அழைப்பித்து 26. திருவாய். 4.6:10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/372&oldid=921135" இலிருந்து மீள்விக்கப்பட்டது