பக்கம்:வைணவ உரைவளம்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 35.1 {அடல்-வீரத்த ள்மை வாய்ந்த, ஆழி-சக்கரம்: துப்பனே-சமர்த்தனே; கண்டிட-சேவிக்க; கண்ணநீர்-கண் ணிர் : துவர்ந்து-உலர்ந்து.:

  • திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி: ஆழ்வார் அழைத்தலைக் கூறும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம் இது. இதில் ஆழ்வார், 'எந்தையே! வலிமை பொருந்திய திருவாழியை யுடையவனே! ஆழ்ந்துள்ள திருப்பாற்கடலைக் கடைந்த வலிமையை யுடையவனே! உன்னுடைய தோள்கள் நான்கனையும் கண்டதாய்விடக் கூடுமோ? என்று எப்பொழுதும் கண்ணும் கம்பலையுமாய் நின்று என் உயிரும் பசையற உலற, இந்தக் கணத்திலேயே வரவேணும் என்று விரும்பி, அறிவில்லாத யான், நீ வரக் கூடிய திசையைப் பார்ப்பேன்" என்கின்றார்.

ஏழையேன் நோக்குவனே’: இந்த இடத்தில் ஓர் ஜதிகம் உண்டு. சோழராஜன் சபையில் திருக் கண்களை இழந்த கூரத்தாழ்வானை உடையவர் காஞ்சி வரதராஜ னைப்பற்றி ஒரு ஸ்தவம் பணிக்கும்படி நியமித்தார்; பேரருளாளன் வரந் தரும் பெருமாள் என்று பேர் பெற் றிருக்கையாலே திருக்கண் தந்தருள்வன் என்று திருவுள்ளம் பற்றி அப்படி நியமித்தருளினார். ஆசாரிய நியமனத்தை அடியொற்றி ஆழ்வானும் வரதராஜஸ்தவம் என்றதொரு நூலை அருளிச் செய்து அதை உடையவர் திரு முன்பே விண்ணப்பம் செய்து வருகையில் அதிலுள்ள நீலமேகநிபம்" என்று தொடங்கும் சுலோகரத்தினத்தைத் திருச்செவி சாத்தின உடையவர் : ஆழ்வான்! இப் பாசுரம் கேட்டால் பெருமாள் இரங்காமையில்லை; உன் முகத்தைத் காட்டு பார்ப்போம்' என்றாராம். கனிந்த சொற்களுக்கு எம்பெருமான் காட்சி தந்தே தீருவன் என்று அன்பர்கள் தம்புவதற்கு உறுப்பான ஐதிகம் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/374&oldid=921138" இலிருந்து மீள்விக்கப்பட்டது