பக்கம்:வைணவ உரைவளம்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 355 உமிழும் முட்டை, வைத்து அமைத்த முட்டை, இமை யோர் வாழ் முட்டை, தனி முட்டை என்று தனித்தனியே கூட்டி நயம் காண்க. முட்டை-அண்டம்; கொழுஞ்சோதி உயரம்-பரமபதம், இமையோர் வாழ்தனி முட்டைக் கோட்டையினிற் கழித்து: "கோட்டை என்பது, புறம்புள்ளாரால் புகுதர ஒண்ணா ததுமாய், உள் உள்ளாரால் புறப்படவும் ஒண்ணாதே, புக்க விடமும் புறப்பட்ட விடமும் தெரியாததாயிருக்குமே யன்றோ? அப்படியே இந்த சம்சாரமும் இருத்தலின் இதனைக் கோட்டை" என்கின்றது. "என் மாயை ஒருவரா லும் தாண்ட முடியாதது (கீதை 7:14) என்றானே யன்றோ தானும் . என்னை : இக்கோட்டையிலே அகப்பட்டுப் புறப்பட வழி தெரியாதிருக்கின்ற என்னை. இப்பாசுரத்தின் ஈட்டில் ஒரு வார்த்தை : 'பிள்ளை கறையூர் அரையர், ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்க ஒண்கிறதில்லை; ஒரு சர்வ சக்தி கர்மத்திற்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை அவனைக் கால் கட்டாதே, இவ் வெலி எலும்பானான சம்சாரியால் அவிழ்த்துக் கொள்ளப் போமோ? என்று பணிப்பர்' என்பதாம். 1 GB பேச கின்ற சிவனுக் கும்பிர மன்றனக் கும்,பிறர்க்கும், நாய கன் அவனே;க பாலநன் மோக்கத்துக் கண்டுகொள்மின் ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/378&oldid=921146" இலிருந்து மீள்விக்கப்பட்டது