பக்கம்:வைணவ உரைவளம்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 வைணவ உரைவளம் தேச மன்மதின் சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனுள், ஈசன் பாலோர் அவம்ப றைதல் என்னாவ திலிங்கியர்க்கே?' (பேச நின்ற-பரதெய்வமாகப் பேசப்படுகின்ற, பிறர்-மற்றுமுள்ள தேவதைகள், கபாலம்பிரமனது மண்டையோடு; மோட்சம்-விடு படுதல்; தேசம்-ஒளி: மா-சிறந்த அழகு, ஆய-அழகு பெற்றதான; அவம்-பயன் இன்மை; இலிங்கியர் - அதுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்கள்; அவர்களா வார்; பாசுபத, நையாயிக, வைசேடியர்கள்; லிங்கமாவது ஹேது; அநுமானம் என்கை} எம்பெருமான் எல்லா தேவர்கட்கும் மேம்பட்டவன்" என்று கூறும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம் இது. இதில் ஆழ்வார், பேசப்படுகின்ற சிவபெருமானுக்கும் பிரமனுக்கும் மற்றைத் தேவர்கட்கும் தலைவன் அவனே யாவன்; இதனைக் கபாலம் விடுபட்ட சரிதை யாலே கண்டு கொள்ளுங்கள். ஒளி பொருந்திய பெரிய மதில்கள் சூழ்ந்து அழகாக இருக்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி யிருக்கின்ற சர்வேசுவரன் விஷயத்தில் பயனில்லாத சொற்களை ஏற்றிப் பேசுதல் அநுமானத்தைப் பிரமாணமாகவுடையவர் கட்கு என்ன பயனைத் தருவதாம்' என்கின்றார். கபாலம் விடுபட்ட சரிதை : இந்த இதிகாசம் இந்நூல் பாசுரம்.20.இல் காண்க. ஓர் அவம் பறைதல் : மற்றுமுள்ள rேத்ரஜ்ஞரோடு ஒக்க பணிமந் நாராயணனுக்கு ஈசுவரத் தன்மை இல்லை என்பதற்குச் சாதகமாக ஏதேனும் போலி யுக்திகளைச் 31. திருவாய். 4.10:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/379&oldid=921148" இலிருந்து மீள்விக்கப்பட்டது