பக்கம்:வைணவ உரைவளம்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 385> இவர்தாம் மடல் எடுக்கக் கடவேன்' என்று துணிந்த துணிவுக்கு மேற்பட அநுட்டிக்க வேண்டுவது இல்லை; வன்றோ குணாதிக விஷயம் ஆகையாலே.' ஆற்றாமையை யும் உண்டாக்கி அம்பும் தொடுக்க வேண்டும்படியான விஷயத்தை அன்றே இவர் பற்றியது. கடலைப் பெருமாள் சரண் புக்க இடத்தில் அக்கடல் தானாக வந்து முகம் காட்டாமையாலே நாலு மூன்று அம்பைவிட, உடம்பிலே பாதி வெந்தபின்பே யன்றோ வந்து முகங்காட்டியது; இங்கு அது வேண்டாமையாலே ஒ இலக்குமணா, வில்லைக் கொண்டு வா, ஆசீ விஷத்திற்கு (பாம்புக்கு) ஒப்பான பானங்களைக் கொண்டு வா, சமுத்திரத்தை வற்றச் செய்யப் போகிறேன், வானர வீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்' என்றதைப் போன்று மடல் ஊர்வேன்" என்று அச்சம் உறுத்தி முகம் காட்டுவித்துக் கொள்ளப் பார்க்கிறார். தம்முடைய சொரூபத்தில் கலக்கம் தொடர்ந்து நிற்கச் செய்தேயும் அவனுடைய குணஞானத்தில் கலக்கம் இன்றிக்கே இருக்கிறது காணும். இவர்க்கு. 1 1 எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல் பொற்புடை நெறிமை இன்மையான. என்ற தொல்காப்பியச் சூத்திரத்தின் (தொல். பொருள், ! அகத்திணை.38) விசேட உரையில் நச்சினார்க்கினியர், கடலன்ன கடந்த ராயினும் பெண்டிர் மடல் ஏறார் மைந்தர்மேல் என்ப-மடலூர்தல் காட்டுகேன் வம்பின் கலிவஞ்சி யார் கோமான் வேட்டமா மேற்கொண்டே போழ்து. என்றாராலோ எனின்: "இது மடம் ஏற்றன்று; ஏறுவல் எனக் கூறிய துணையேயாம’ என்பர். இதனால் மகளிர் "மடல் ஏறுவேன்' என்று கூறும் வழக்கு உண்டு என்பது தெளில் தகும். 12. ரீராமா. யுத். 21:22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/388&oldid=921169" இலிருந்து மீள்விக்கப்பட்டது