பக்கம்:வைணவ உரைவளம்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$68 வைணவ உரை வளம் என்று ஆண்டாளும். எம்பெருமானுடைய வலை என்று பொருள் கொள்ளும்போது திருக்கண்களை வலையாகக் கொள்ளலாம். "உகவையால் கெஞ்சம் உள்ளுருகி உன்தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான்' என்று ஆழ்வார் நாயகி மேலும் கூறுவாள். "வலை" என்பது நோக்கையும் புன்முறுவலையும் காட்டுவதற்கு ஈட்டுரையில் காணப்பெறும் ஐதிகம் : ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் (இப் பாசுரத்தைப் பாடும்போது) வலையாக அபிநயித்துப் பாடா நிற்க, எம் பெருமானார் திருக் கண்களைக் காட்டி யருளினார். கார்த்தண் கமலக்கண் என்னும் நெடுங்கயிறு" என்னக் கடவதன்றோ? அதுகூலம்போலேயிருந்து தப்பாதபடி அகப் படுத்திக் கொள்ளும் நோக்கிலே அகப்பட்டேன்' என்பது. リア2 வலையுள் அகப்படுத் தென்னைகன் னெஞ்சம் கூவிக்கொண்டு, அலைகடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் றன்னை: கலைகொள் அகலல்குல் தோழி! கம்கண்க ளால்கண்டு தலையில் வணங்கவும் ஆங்கொலோ தைய லார்முன்பே." |வலையுள் - குணசேஷ்டிதங்களாகிய வலையுள்; அகப்படுத்து-சிக்கிக்கொள்ளும்படி செய்து: 13. திருவாய். 6.2:9 (இதுவும் மகள் பாசுரம்) 16. திருவாய். 5.3:7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/391&oldid=921176" இலிருந்து மீள்விக்கப்பட்டது