பக்கம்:வைணவ உரைவளம்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 375 தாகும்" என்று திருத்தாயார் நம்பியை நான் காண்பதற்கு விடுகின்றிலள்; சிறந்த புகழையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் நிறைந்த பேரொளியின் கூட்டத் தாலே சூழப்பட்ட நீண்ட அழகிய திருமேனியோடும் என் மனத்திற்குள்ளே நிறைந்து நின்று விட்டான்: திருச் சக்கரமும் அழகிய கையிலே உள்ளது' என்பதாக, 'கிறைந்தவன் பழி...காணக்கொடாள்": இங்கே பழியாகச் சொல்லுகிறது, ஸ்வாப தேசத்திலே, இவ்வுலக இன்பம் அவ்வுலக இன்பம் என்னும் வேறுபாடு அற இரண்டிற்கும் அவனே கடவன் என் அவன் கையைப் பார்க்குமது ஒழிய அவற்றிற்காகத் தான் செய்யும் முயற்சியை என்று கூறத் திருவுள்ளம்பற்றி தன்முயற்சி பழி' என்பதற்கு ஐதிகம் காட்டுகின்றார். கூரத்தாழ்வானின் திருத்தேவியாராகிய ஆண்டாள் ஒரு நாள் பட்டரையும் சீராமப்பிள்ளை யையும் காட்டி, "இவர்கள் திருமணத்தைச் செய்வதற்குரிய பருவத்தை அடைந்தார்கள்; பேசாதே இருக்கிறது என்?" என்ன, ஆழ்வானும், ஆகில், நாளை பெருமாள் பாடே போனவாறே வரக் காட்டு' என்று கூற, அவர்களையும் கொண்டு திருமுன்பே நிற்கச் செய்தே, பெருமாள் அருளப் பாடிட்டு, ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே!” என்று திருவுள்ளமாக, இவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தினர் ஆனார்கள்’ என்று சொல்லா நின்றார்கள்' என்ன, நாமே ஒத்ததான இடத்தில் சம்பந்தம் செய்து தருகின்றோம்" என்று அருளிச் செய்ய, பிற்றைநாள் கன்னியைக் கொண்டு நீர்வார்த்தார்கள். ஆக, அத்தலை யாலே வருவதுஒழிய, தாம்தாம் ஒன்றை ஆசைப்படுகையும் கூடப்பழி' என்று இருக்கும் குடிகாணும்.’’ என்பது. இதனால் இவ்வுலக இன்பத்திற்காகவும் &fa l-و ஈசுவரனையொழிய, தானாகவே ஒரு முயற்சியைச் செய்தல் ஸ்வரூபத்திற்கு விரோதம் என்று தோற்றுகையாலே, அவ்வுலக இன்பத்திற்குத்தான் முயற்சி செய்தல் ஸ்வருபத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/398&oldid=921190" இலிருந்து மீள்விக்கப்பட்டது