பக்கம்:வைணவ உரைவளம்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 3ፐ ፑ fவந்தருளி- (பரமபதம் முதலியவற்றை விட்டு) எழுந்தருளி; இடம் - இருப்பிடமாக: உலகுக்கு-இந்த உலகுக்கு: செந்தொழிலவர் சிறந்த அநுட்டானங்களையுடைய வைணவர் கள்; அறா-இடையறாமல்; சீரீவரமங்கலம் வானமாமலை; அந்தம் இல்- முடிவில்லாத : அகற்றேல்-புறப்புபடுத்தா தொழிக1 வானமாமலைப் பெருமானது அருளை வேண்டும்" திருவாய்மொழியில் ஒரு பாசுரம். பரமபதத்திலிருந்து வந்து என நெஞ்சினை இடமாகக் கொண்டவானவர் கொழுந்தே! இந்த உலகங்கட்கு ஒப்பற்ற பழமையான தாயும் தந்தையுமானவனே! எல்லா உலகங்களையும் பிரளய காலத்தில் உண்டவனே! பயன் கருதாத கைங்கர் யத்தையுடைய பூர் வைணவர்களுடைய வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கின்ற சிரீ வர மங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற எல்லை இல்லாத புகழையுடைய வனே! உனக்கு அடிமைப்பட்டுள்ள அடியேனை நீக்காமல் இருக்கவேண்டும்' என்கின்றார் ஆழ்வார் இதில். வந்தருளி என்நெஞ்சிடங் கொண்ட என்ற இடத்தில் கம்பிள்ளை ஈட்டு சுக்தி பரம போக்கியமானது. அது வரு மாறு: "பட்டர் பூரீ புஷ்பயாகம்2 அணித்தானவாறே, கஞ்சீயரைப் பலகாலும் இயல் கேட்டருள்வர்; ஒரு கோடை யிலே திருவீதியிலே நீரைவிட்டு எழுந்தருளியிருந்து இப் பாசுரத்தை இயல் சொல்லும்’ என்று சீயரை அருளிச் 28. புஷ்ப யாகம்-இது ஒருவி தயாக விசேடம். பிரம் மோத்சவத்தின் முடிவில் (பத்தாவது உத்சவம்) பெருமாளுக்கு எதிரில் மண்டலங்கள் போட்டு, அதில் மற்றைப் பொருள்களையும் நெருப்பையும் கலவாமல், புஷ்பங்களையே கொண்டு அர்ச்சனை செய்வதுபோன்று யாகம் செய்வது என்பர். இது, திருவரங்கத்தில் பிரம்மோத்சவத்தில் இன்றும் செய்யப்பெற்று வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/400&oldid=921197" இலிருந்து மீள்விக்கப்பட்டது