பக்கம்:வைணவ உரைவளம்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாங்மொழி 霉雷钟 சிரார் செக்கெல் கவனி வீசும் செழுர்ே திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கடந்தாய் கண்டேன் எம்மானே!"2 fஆரா-- தெவிட்டாத, உடலம்- சரீரம்; நின் பால்-உன்திறத்தில்; நீர்ஆய்-நீர்ப்பண்ட மாக: அலைந்து-வியாகூலப்பட்டு; கவரிசாமரம்; ஏர்ஆர்-அழகு பொருந்தி; கோலம்திருமேனி; திகழ்-விளங்க; கிடந்தாய்சாய்ந்தருளினாய்) திருகுடந்தை எம்பெருமான்மீது மங்களாசாசனம் பெற்ற திருவாய்மொழியில் ஒரு பாசுரம், இதில் ஆழ்வார், எம்மானே! தெவிட்டாத அமுதே! அடியேனு டைய உடல் உன் விஷயத்தில் அன்புதானே தனக்கு உருவ மாகிப் பின்பு தண்ணிராகி ஒரு நிலையில் நில்லாமல் கரையும்படி உருக்குகின்ற நெடுமாலே! சிறப்புப் பொருந்திய செந்நெற்பயிர்கள் சாமரையைப் போன்று வீசுகின்ற செழுமை பொருந்திய நீரையுடைய திருக் மடந்தை என்னும் திவ்வியதேசத்தில் அழகு பொருந்திய ஒப்பனையானது விளங்கும் படியாகக் சயனித்திருக் கின்றவனே! என் கண்களாலே கண்டு அநுபவிக்கப் ஒருபெற்றேன்' என்கின்றார். ஆரா வமுதே' : உண்ண உண்ணத் தெவிட்டாத, திருப்தி பிறவாத அமுதம். கடலில் உப்புச்சாறு33 குடிப்பார்க்கு தேவயோனியில் பிறக்கவேண்டும், பிரம்மச் சரியம் அநுட்டிக்கவேண்டும், இத்தனையும் இருந்தால் ஒரு நடவை உண்ணக் கூடியதாக இருக்கும்; இஃது அங்ங்ன் 32. திருவாய். 5. 8. 1 33. உப்புச்சாறு - திருப்பாற்கடலில் தோன்றிய அமுதம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/402&oldid=921201" இலிருந்து மீள்விக்கப்பட்டது