பக்கம்:வைணவ உரைவளம்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய் மொழி $趣蚤 தில்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானின் திருவடிகளில் அடியேன் சேர்வது என்று கொல்?" என்கின் றான். திரு வல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியரை நோக்கித் தலைமகள் கூறுவதாக அமைந்தது இத் திருவாய் மொழி. "வான் ஆர் வண்கமுகும் மதுமல்லிகை கமழும் தேனார் சோலைகள் : "இவ்வாற்றாமையோடே இருந்து சோலை யைக் கவிபாடுகிறது, உள்ளே நிற்கின்றவனைப் போன்று இவையும் இனிய பொருள்களாக இருக்கையால் அன்றோ? மனத்தினை உள்முகமாக்கி அநுபவிக்கமாட்டாதார்க்கு, தன்னை அவர்களின் கண்களுக்கு இலக்காக்கிக் கொண்டு உபாய வஸ்து நிற்கிறார்போலே காணும் இவையும்? யாவர்க்கும் தொழு குலமான சர்வேசுவரனுடைய உபாய பாவத்தில் நிலைபோலே, நித்தியப் பிராப்பியனாய்க் கொண்டு அங்கே இருக்கின்றவன், அடியார்கள் உகந்தது ஒரு பொருளைத் திருமேனியாகக் கொண்டு முகங் கொடுத்துக் கொண்டு நிற்பதுபோலே, அங்குள்ளாரும் இங்குப் போந்து தாவரங்களாயும் விலங்குகளாயும் அவனை விடமாட்டாதே நிற்கிறபடி, நித்தியரும் முக்தரும் சம்சாரிகளில் ருசியுடையாரும், உகந்தருளின நிலங்களைப் பற்றியன்றோ கிடப்பது?'-என்பது ஈட்டுரை. ஓர் ஐதிகம் : :ஜனநாதப் பிரம்ம நாயர் திருமுடிக் குறை யிலே" ஒருமரத்தை வெட்ட முனைந்தார். இதனை எம்பார் கேட்டு அல்லாலப் பெருமாளே! ஈசுவரவிபூதியை அழிக்கப் பார்த்தாயோ?" என்ன, இவர் சொல்லும் வார்த் தையைக் கேட்கைக்காக ஈசுவர விபூதி அல்லாத இடம் உண்டோ?' என்ன, அவைபோல் அல்ல காண் இவை; 39. திருமுடிக்குறை - பெருமாளுடைய திருமுடிப் பிரதேசமான உபய காவேரியின் மத்திய பிரதேசம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/406&oldid=921209" இலிருந்து மீள்விக்கப்பட்டது