பக்கம்:வைணவ உரைவளம்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 39t மாலத்தில் வில்லை வளைத்து நாணை ஏற்றுதலாகின்ற அந்தக் காரியத்தே மிகவும் பொறுத்துக் கொண்டான்" என்பது பாரதம் கர்ணபர்வம். சர்வேசுவரன் அந்தராத்மாவாய் நிற்கையிலே செய் தான்' என்றதனால் பலிதமான சிவனுடைய உயர்வு பகவானுக்கு அதீனப்பட்டது என்றதற்கு ஐதிகம். பண்டு ஒர் அரசன் சிவனே பரம் பொருள்' என்று எழுதி எழுத் திட்டுத் தாருங்கோள்' என்ன, அப்படிப் பலரும் எழுதி எழுத்திடா நிற்கச் செய்தே கூரத்தாழ்வான், வாராய், நீ இந்த ஒலை கெடாமே நோக் கி வைத்தால் அன்றோ இவனுடைய பரத்துவம் சாதிக்கலாவது; நீ நினைக்கிற தேவதைக்கு உண்டான உயர்வுகள் சர்வேசுவரனாலே" என்று பிரமாணங்கள் சொல்லா நின்றன; ஆன பின்னர், இன்று, நீ சொல்ல நான் எழுத்திட்டுப் போகிறேன். நாளை ஓர் அறிவுடையவன்5 (விவட்சிதன்) தோன்றி இவன் அறிவினனாய் இருந்தானே!" என்னக் கேட்பதில் இன்று நீ நினைத்ததைச் செய்து கொள்ள மாட்டாயோ?" என்றார். 51. இங்கு, அவத்தப்புன் சமயச்சொற் பொய்யை மெய்யென்று அணிமிடறு புழுத்தான்தன் அவையின் மேவிச் சிவத்துக்கு மேற்பதக்குண் டென்று தீட்டும் திருக்கூர வேதியர்கோன் செவ்வி பாடப் பவத்துக்கம் பிணிநீங்க நரகங் தூரப் பரமபதம் குடிமலியப் பள்ளி கொள்ளும் நவத்துப்புச் செங்கனிவாய்க் கரிய மேனி நம்பெருமாள் அரங்கேசர் ஆடி ரூசல் -சீரங்க நாயகர் ஊசல்.20 என்ற திருப்பாசுரம் நினைத்தல் தகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/414&oldid=921228" இலிருந்து மீள்விக்கப்பட்டது