பக்கம்:வைணவ உரைவளம்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 39 3 அவன் அடியார் பொருட்டுச் செய்யும் செயல்களுக்கு ஐதிகங்கள் காட்டுகின்றார். முதல் ஐதிகம் : போரப் பாட வல்லாராயிருப்பார் ஒருவர், வடக்குநின்றும் பெருமாளைத் திருவடி தொழ வேண்டும்" என்று வர, ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் தீர்த்தத்தின் அன்றிருந்து திருமாலையைப் பாடி" முடித்துப் பெருமாளை மத்தகஜங்களை ஏத்துமாறு போலே ஏத்தி வசமாக்கிச் சபதம் கொண்டு : நாயன்தே! தேவர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவள், எழுநூற்றுக் காதம் வழிகடந்து தேவரைத் திருவடி தொழ வேண்டும் என்று வருகிறது; இவனை அழைத்துக்கொண்டு சம்பா வனை செய்தருள வேண்டும்' என்று வேண்ட, பெருமாளும் அப்படியே செய்கின்றோம்' என்று திரு வுள்ளமாய் அருளப் பாடிட்டு, திருப்புன்னைக்54 கீழ்நின்றும் அவர் நின்றவிடத்தளவும் செல்ல நாலு கோல்தறை திருக் கைத்தலத்திலே எழுந்தருளி, விண்ணப்பம் செய்வார்களை யெல்லாம் அருளப் பாடிட்டு வாரீர்கோள், இவன் வந்த துரத்துக்கெல்லாம் போருமோ நாம் இவனுக்குச் செய்த தரம்” என்று திருவுள்ளமானார். இரண்டாம் ஐதிகம் : அநுகூலரை அங்கீகரிக்குமாறு போன்று, குற்றம் பொருந்திய நம்மை அங்கீகரிக்கக் கூடுமோ? என்ன, புருஷகார பலத்தாலே கூடும் என்பதற்கு ஐதிகம் காட்டுகின்றார். ஒருநாள் ரீவைஷ்ணவ வண்ணாத் தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி (துவைத்து) எம்பெருமானார்க்குக் கொண்டு வந்து காட்ட, போரத் திரு வுள்ள முகந்தாராய் இவனையும் கூடக்கொண்டு;பெருமாள் பாடே புக்கு, நாயன்தே! இவன், திருவரைக்குத் தகுதி 53. தொண்டகிரப் பொடியாழ்வார் அருளிச் செய்த பிரபந்தம். 54. திருவரங்கநாதன் திருக்கோயில் தல விருட்சம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/416&oldid=921230" இலிருந்து மீள்விக்கப்பட்டது