பக்கம்:வைணவ உரைவளம்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 வைணவ உரைவளம் அங்ஙனமே ஞானம், ஒழுக்கம் (அநுட்டானம்) என்னும் இரண்டாலும் இறைவன் அடையப் பெறுகின்றான் என்பது ஆன்றோர் கொள்கை. எனவே, ஞானத்தையும் அநுட்டா னத்தையும் சிறகுகளாகக் கொள்ளல் வேண்டும். ஆசாரியர் களும், ஒரு சாலை மாணாக்கர்களும், புத்திரர்களும் இறைவனை அடையும் பேற்றுக்குத் துணையாக இருப் பார்கள் என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயக னாரின் திருவுள்ளமாகும். உறவு இல்லாத பறவைகள் தன் காரியம் செய்யக் கூடுமோ? என்ன, தன் பக்கத்தில் வாழ்கின்ற பறவைகளை, "ஒரே இடத்தில் வசிப்பதால் வந்த சம்பந்தமே நம் காரியம் செய்து தலைக் கட்டுகைக்கு உறுப்பு' என்று பார்த்து அவற்றின் கால்களிலே விழுந்து போகவிடுகின்றாள். ஐதிகம் : நஞ்சீயர் இத் திருவாய்மொழி அருளிச் செய்யப் புக்கவாறே, உருத்தோறும் அருளிச் செய்யும் வார்த்தை. பாண்டவர்கள் காரியத்துக்காகத் தன்னை? ஒக்கி அவர்கள் படுகின்ற வியசன மெல்லாம் படுகிறார் காணும் இவரும்; அவர்கள் தாய் ஒரு தர்மஆபாசம் (போலி தர்மம், தர்மப் போலி) உண்டு என்று இருக்கையாலே வியசனப்பட்டார்கள்; இவர்க்கு ஆழ்வார்க்கு அதுவு மின்றிக்கே இருக்க என் செய்யப்படுகிறார்' என்று அருளிச் செய்வர். 雕84 வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குறுகினங்காள்! செய்கொள் செந்நெலுயர் திருவண் வண்டுர் உறையும் 4. இவர் ஆசாரிய ஹிருதயம்' என்ற நூலின் ஆசிரியர். 5. தன்னை என்றது கண்ணபிரானை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/419&oldid=921234" இலிருந்து மீள்விக்கப்பட்டது