பக்கம்:வைணவ உரைவளம்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 407 பார்த்தாலும் சுக்கான் பருக்கைபோலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும் இன்று அழிகிறபடி கண்டால் சம காலத்தில் மரங்கள் இரங்கச் சொல்ல வேண்டுமோ?" என்பது. "மரங்கள் கின்றுமது தாரைகள் பாயும்; மலர்கள் வீழும்:வளர் கொம்புகள் தாழும்."2" என்று அவதாரத்தில் திருக்குழல் ஓசையில் பட்ட எல்லாம் இத்துன்ப ஒலியிலே படுமாயின. 191 'உண்ணும் சோறு பருகுநீர்'4 : தாய்ப் பாசுரம். உள்ளுறைப்பொருளாக அறிய வேண்டியது இது: பெண் பிள்ளையைப் பெற்று வளர்ப்பவள் தாய். அப்பெண் தக்க வயதை அடைந்ததும் பேராண்மைக்கு இருப்பிடமாகவுள்ள தலைவனிடம் கழிபெருங் காதலை உடையவளாகின்றாள். அவன் இருக்கும் இடத்தைப் போய்ச் சேர வேண்டும் என்று பதறுகின்றாள். ஆனால் அவளது பதற்றத்தைத் தடுத்து நிறுத்துகின்றாள் தாய். தலைவனே தலைவி இருக்கும் இடத்திற்கு வர வேண்டும் என்பது நடைபெற வேண்டிய ஒழுங்கு முறை என்றும், அங்ங்ணமின்றித் தலைவியே தலைவன் இருக்கும் இடத்திற்கு புறப்படுவது குல மரியாதைக்குச் சிறிதும் பொருந்துவதன்று என்றும் நினைக்கின்றாள் தாய். சித்தோபாயனமான எம்பெரு மானைப் பற்றினவர்கள் பேற்றைத் தாமதித்துப் பெறு தலில் காரணமில்லாமையாலே அதனை விரைவில் பெற வேண்டும் என்கின்ற ஆவலைப் பிறப்பித்து அதனால் படி 24. திருவாய். 6.7 (அவதாரிகை).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/430&oldid=921247" இலிருந்து மீள்விக்கப்பட்டது