பக்கம்:வைணவ உரைவளம்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 வைணவ உரைவளம் கடந்து நடக்க வேண்டி வந்த அளவில் இது பிரபநதர் குடிக் கட்டுப்பாட்டுக்குச் சேராத தென்று விலக்கி எம் பெருமான் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டிருக்க வேணும் என்று சொல்லித் துடிப்பை அடக்கப் பார்க் கின்றவள் தாய். அஃதாவது நம: பதத்திற் கூறப்பெற்ற உபாய எண்ணமாகிய (அத்யவ சாயமாகிற) பிரஜ்ஞா வஸ்தையைத் தாய் என்பதாகக் கொள்ளல் வேண்டும். இதனை மேலும் விளக்குவது இன்றியமையாததாகின்றது. திருமந்திரத்தின் இரண்டாவது சொல்லாகிய நம: என்பது இந்நிலையைக் குறிக்கின்றது. இச் சொல்லை ந+ம: என்று இரண்டாகப் பிரிக்கலாம் . 'ம' என்பது வட மொழியில் எனக்கு உரியவன்' என்றும், ந' என்பது 'அல்லன்' என்றும் பொருள்படுகின்றன. அஃதாவது, எனக்கு நான் உரியவன் அல்லன்' என்ற பொருள் கிடைக் கின்றது. இதனால் நான் பிறனுக்கு (ஈசுவரனுக்கு) உரிய வன்' என்பது பெறப்படுகின்றது. இம்முறையில் இச்சொல் ஈசுவர பாரதந்திரியத்தைத் தெரிவிக்கின்றது. இன்னும் விளக்கிக் கூறினால் இச்சொல் ஞானத்தினால் ஏற்படும் சுதந்திரத் தன்மையை ஒழிக்கின்றது. அதன் காரணமாக ஏற்படும் தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியும்" என்ற எண்ணத்தையும் நீக்குகின்றது. இனி, இவனைக் காத்து இரட்சிப்பவன் ஈசுவரனே ஆகின்றான் என்ற துணிவு பிறக்கின்றது; அஃதாவது, ஈசுவரனே உபாயம் என்று பொருள் கிடைக்கின்றது இந்த மன நிலைதான் "தாய்' என்று குறிக்கப்பெறுகின்றது. திருவாய்மொழியில் தாய் பாவனையில் பேசின ஏழு பதிகங்களும் ஈசுவரபாரதற் திரியத்தையும், அவனே உபாயமாகின்றான் என்ற கருத்தையும் தெரிவிக்கின்றன. ஆழ்வார்க்குப் பேற்றில் பதற்றம்" விளைந்தமை ஒரு பக்கத்திலும் அவனுடைய பேற்றுக்கு *நாமோ பதற்றப்படுவது?" என்று 13. பிரஜ்ஞாவஸ்தை-மூன்று காலத்தையும் அறியும் அறிவின் நிலை; அவஸ்தை-நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/431&oldid=921248" இலிருந்து மீள்விக்கப்பட்டது