பக்கம்:வைணவ உரைவளம்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய் மொழி 413 பூமியல் பொழிலும் தடமும் அவன்கோயி லுங்கண்டு ஆவியுள் குளிர. எங்ங்னே யுகக்குங்கொல் இன றே?2" (மேவி-ஈடுபடடு, நைந்து- இளைத்து; விளை யாடல் உறாள்-விளையாட்டில் பொருந்தா தவளாய்; சிறுதேவி-மகள்;.போய்-சென்று; பொழில் - சோலை: தடம் - தடாகம்: கோயில்-சந்நிதி; கண்டு-பார்த்து; ஆவிநெஞ்சு; உகக்கும் கொல்-களித்திருப்பாள்; தாய்ப்பாசுரம். தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குவதாக அமைந்த திருவாய்மொழியில் ஒரு பாசுரம் இது இதில் திருத் தாயார், :: என்னுடைய இளமை பொருந்திய பெண்ணானவள், அவனை மனத்தாலே அடைந்து அதனாலே மனமும் உடலும் உருக்குலைந்து விளையாடு தலைச் செய்யாள்; இனிச் சென்று, தனது திருமால் எழுந் தருளியிருக்கின்ற திருக்கோளுர் என்னும் திவ்விய தேசத்தில் இருக்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளையும் குளங்களையும் அவனுடைய திருக்கோயிலையும் உயிர் குளிரும்படியாகக் கணடு இன்று எப்படி மகிழ்கின்றாளோ? என்கின்றாள். 'கண்டு இங்கே இருந்து மானச அநுபவமத்திரமே யாய்க் கிலேசப் பட்டவள் கண்ணாரக் கண்டு. அவள் கோயிலைக் கண்களாலே காண்கையே புருஷார்த்தம் என்பதற்கு இரண்டு ஐதிகங்கள் காட்டுகின்றார் சட்டாசிரியர். ஐதிகம் ஒன்று: 'பிள்ளை திருநறையூர் அரையரும் பட்டருமாக உள்ளே வலம்வரா நிற்க, இட்ட அடி மாறி 29. திருவாய் 6. 7: 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/436&oldid=921253" இலிருந்து மீள்விக்கப்பட்டது