பக்கம்:வைணவ உரைவளம்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 4 * 5 விடாமல் உள்குளிர' என்று ஆழ்ந்து ஊற்றத்தோடு உறைப்பாக அநுசந்திக்க வேண்டுமென்று ஆசாரியர்கள் சிட்சிப்பார்கள், T 94 காரியம் கலலகை ளவைகானில் என்கண்ண னுக்கென்று ஈரியா யிருப்பா ளிதெல்லாம் கிடக்க இனிப்போய் சேரி பல்பழி தூயிரைப்பத் திருக்கோ ளுர்க்கே கேரிழை நடந்தா ளெம்மை யொன்றும் கினைத்திலளே.33 (காரியம்-பொருள்கள்கள், ஈரியாய்-அன்புள்ள வளாய்: சேரி-தெரு, தூவாய்-துள்வி, துாற்றி: நேரிழை-நேரிய ஆபரணங்களை அணிந்த வள் (பெண்)) தாய் பாசுரம் : தலைவனது நகர் நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குவதாக அமைந்த திருவாய் மொழியிலுள்ள பாசுரம் இது. என் நேரிழை, சிறந்த பொருள்களைக் கண்டால் என் கண்ணபிரானுக்கு என்று சொல்லிக்கொண்டு அன்புள்ளவாய் இருப்பாள்; இவை எல்லாம் கிடக்க, சேரியிலுள்ளார் எல்லாரும் பலவகைப் பட்ட பழிகளைத் துாற்றி இரைக்கும்படியாக இனிச் சென்று திருக்கோளுர்க்கே நடந்தாள்: என்னைச் சிறிதும் நினைத்தாள் இல்லை' என்று திருத்தாயார் கூறுகின்றாள். 32. முகந்து கொண்டு-மண்டி அநுபவித்துக் கொண்டு. 33. திருவாய். 6.7:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/438&oldid=921255" இலிருந்து மீள்விக்கப்பட்டது