பக்கம்:வைணவ உரைவளம்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 6 வைணவ உரைவளம் கேரிழை கடந்தாள்': இழை என்று ஆபரணத்திற்கு. பெயர். நேர்த்தியான ஆபரணங்களை அணிந்துள்ள என் மகள் மெல்லிய அடிகளைக் கொண்டு நடந்தாளே! தன் மகளின் செளகுமார்யத்தை அதுசந்தித்திருக்கும் திருத் தாயார் ஐயோ! நடந்தாளே! என்கின்றாள். நடந்து செல்லுகிறபோதே முன்னும் பின்னும் ஆபரண ஸ்ந்நிவேச ஸ்ெளந்தர்யாதிசயத்தைத்தான் காணப்பெறாத இழவும் தொனிக்கும். நடந்தாள்’ என்கிற சொல் சம்பிரதாயத் தில் எழுந்தருளினாள் என்பதற்குப் பரியாயமாக வழங் கும். ஆனதுபற்றியே ஈட்டில் அருளிச் செய்தது பாரீர்! க(நடந்தாள்) தன் பெண்பிள்ளையேயாகிலும் திருக் கோளுரிலே போக’ என்று நாலடி புறப்பட்ட இவளை இங்ங்ன் அல்லது சொல்ல வொண்ணாதே அன்றோ? தன் மகளை எங்ங்னே சினக்க நினைத்திருக்கிறாள்தான்! வயிற்றில் பிறக்குவுமாம், சிஷ்யர்களாகவுமாம்: பகவத் விஷயத்தில் தொடர்புடையவர்கள் உத்தேசியராமித் தனை. இவ்விடத்தில் ஈட்டிலுள்ள ஓர் ஐதிகம் : ஒரு நாள் நம் பிள்ளையை, சீயர், கோஷ்டியிலே வைத்துப் போரக் கொண்டாடியருளி தன் சிஷ்யனைத் தான் கொண்டாடா நின்றான்' எனறிராதே கொணர்மின்!; கணபுரம் கை தொழும், பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறு வரே'34 என்று பண்டு சொன்னாரும் உளர் காணுங்கோள்" என்று அருளிச் செய்தார். மற்றோர் ஐதிகம்: 'அம்முணி ஆழ்வான் தன் சிஷ்யனைத் தான் தெண்டனிடா நிற்குமாம்; இது என்?’ என்று கேட்க, *அல்லாத வைஷ்ணவர்களை ஒழுக்கத்தாலே அறிய வேணும்; இவர் நான் அறிய வைணவர் என்று ஆதரிப்பன்" என்றான்.' 34. பெரி. திரு. 8.2:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/439&oldid=921256" இலிருந்து மீள்விக்கப்பட்டது