பக்கம்:வைணவ உரைவளம்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 4.17 鶴ー)5 வைத்த மாநிதி யாம்மது சூதனை யேயலற்றி கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்த்திருக் கோளுர்க்கே சித்தம் வைத்துரைப் பார் திகழ் பொன்னுல காள்வாரே...' (வைத்தமாநிதி-சேமித்து வைத்த மகாநிதி; அலற்றி-வெருவி: பொழில்-சோலை; பத்து நூறு-ஆயிரம்; அவன் சேர்-அவன் எழுந் தருளி யிருக்கின்ற; சித்தம்-மனம்; திகழ்விளங்குகின்ற; பொன் உலகு-பரம பதம், ! மகள் பாசுரத்தில் : ஆழ்வார் தானான தன்மையில் பேசி இப்பதிகம் ஒதுவார் அடையும் பயனைக் கூறித் தலைக்கட்டுவது இப்பாசுரம் : சேமித்து வைத்த சேம நிதி போன்ற மதுசூதனையே பற்றி, பூங்கொத்துகள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகரில் அவதரித்த சடகோப ராலே அலற்றி அருளிச்செய்யப்பெற்ற பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளுரிலே சித்தத்தை வைத்து உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள்' என்கின்றார் ஆழ்வார். 35. திருவாய். 6.7:11 வை.-27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/440&oldid=921258" இலிருந்து மீள்விக்கப்பட்டது