பக்கம்:வைணவ உரைவளம்.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 42t பொன்னுலகு ஆளிரோ : எம்பெருமான் திறத்தில் புருஷகாரக் கிருத்தியம் பண்ணுபவர்களுக்கு உபய விபூதி யையும் பரிசளித்தாலும் போதாது என்கின்ற சாஸ்தி ரார்த்தம் இப்பாசுரத்தில் தெளிவாகின்றது. ஈசுவரனுக் குரியதான உலகங்களைக் கொடுப்பதற்கு இவளுக்குப் பிராப்தி உண்டோ? என்ன, உண்டு என்று திருவுள்ளம் பற்றி, இதற்கு மூன்று வகையாக விடை அருளிச் செய் §airpm it. (1) ஈசுவரனுடைய விபூதியானது பிரிவு நிலையில் அவனையும் தன்னையும் சேர்த்தார்க்குப் பரிசிலாகக் கண்டது என்று இருக்கின்றாள். இது முதல் விடை. (2) இரண்டு விபூதிகளும் ஒரு மிதுனத்திற்கு அடிமை யன்றோ? இது இரண்டாவது விடை. (3) காதலனைப் பிரிந்து சேர்ப்பாரைத் தேடித் திரி கின்ற இவள், சேர்ப்பிப்பார்க்கு இரண்டு உலகங்களையும் கொடுக்கிறாள் அன்றோ, அவனை நினைத்திருந்த கனம். இது மூன்றாவது விடை. வினையாட்டியேன் கான் இரந்தேன் : ஆழ்வார் நாயகி து.ாது செல்ல வேண்டும் என்று இரக்கின்றாள் அல்லள்: ‘உபய விபூதியையும் உங்களுக்கு நான் கொடுக்க நீங்கள் அவற்றை ஆள வேண்டும்" என்கின்றாள். எம்பெரு மானார் கோஷ்டியில் ஓர் ஆராய்ச்சி செய்தார்களாம்: இவள் உபய விபூதியையும் கொடுத்து விட்டாளாகில் அவன் வந்தால் தானும் அவளும் எங்கிருப்பதென்று. அப்பொழுது அனந்தாழ்வான் பணித்தாராம்-இக்குருவி காட்டின இடத்தே என்று. இரசிகர்களின் சங்கையும் சமாதானமும் அநுபவிக்கத்தக்கனவா யிருக்கும். தன்னையும் தன்னுடைமையையும் இவர் இட்ட வழக்காக்கி இவர்க்கு அவன் பரதந்தரனாயிருக்கையாலே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/444&oldid=921262" இலிருந்து மீள்விக்கப்பட்டது