பக்கம்:வைணவ உரைவளம்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 வைணவ உரைவளம் இவர் கொடுக்கலாம் என்னுமதனை ஒர் ஐதிக முகத்தால் விளங்குகின்றார். இஃது ஐதிகம் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தோவிலே, பிள்ளை உறங்கா வில்லி தாசரைக் கொண்டு ஆழ்வான் புக, ஆழ்வான் செய்த நெஞ்சாறல் ஆறுவது ஆளவந்தார் பூரீபாதத்து ஏறப் போனால் அன்றோ என்ற வார்த்தையை நினைப்பது." 48. 49, 197 என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெரு மானென்கண்ணன் தன்மன்னு ள்ேகழல்மேல் தண்துழாய்கமக் கன்றிகல்கான் கன்மின்கள் என்றும்மையான் கற்பியாவைத்த மாற்றம்சொல்லி சென்மின்கள் தீவினையேன் வளர்த்தசிறு பூவைகளே." அருளாளப் பெருமாள் எம்பெருமானார், கூரத் தாழ்வான், பிள்ளை உறங்கா வில்லிதாசர் இம் மூவரும் எம்பெருமானார்க்கு மாணாக்கர்கள். ஆழ்வான் செய்த நெஞ்சாறல்' என்றது, கூரத்தாழ்வானுக்குப் பரமபதத்தைக் கொடுக்கும் சக்தி இருந்தும், அருளாளப் பெருமாள் எம் பெருமானார்க்கு அதனைக் கொடாமல், அவர் படும் துன்பத்தை அவர் கண்டு கொண்டிருந்தமை யால் வந்த மனோ துக்கம் என்றபடி, தம்முடைய ஆசாரியரான எம்பெருமானார் இங்கே எழுந் தருளியிருப்பதனால் ஆளவந்தார் பூரீபாதத்து ஏறப் போனால் என்கின்றார். இப்படிச் சொல் வதாவது பரமபதத்தை அடைதல்" என்பதாகும். திருவாய். 6.8:6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/445&oldid=921263" இலிருந்து மீள்விக்கப்பட்டது