பக்கம்:வைணவ உரைவளம்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 423 (மின்னு நூல்-பூணுரல்; நீள்கழல்-நீண்ட திருவடி கள்; மன்னு-பொருந்தியிருக்கின்ற, கன் மின்கள்-பயிற்சி செய்யுங்கள்; மாற்றம்பாசுரங்கள்; சென்மின்கள்-செல்லுங்கள்.) மகள் பாசுரம் : திருநாடு முதலியவற்றிற்குத் தலை மகள் பறவைகளைத் துரது விடுவதாக அமைந்த திருவாய் மொழியில் ஒரு பாசுரம். தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே! என் மின்னு நூல்.மார்பன், என் கரும் பெருமான் என் கண்ணன் தன்னுடைய நீண்ட திருவடி களின் மேலே பொருந்தியிருக்கின்ற குளிர்ந்த திருத்துழா யினை நமக்கு அன்றிக்கொடான்; கற்றுக் கொள்ளுங் கோள்' என்று உங்களை யான் கற்பித்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு செல்லுங்கோள்' என்கின்றாள் ஆழ்வார் நாயகி. 'தன்ள்ே கழல்மேல் மன்னு தண்துழாய் கமக்கு அன்றி நல்கான் : இனிமை அளவிறந்த திருவடிகளிலே பொருந்திச் சிரமத்தைப் போக்கக் கூடிய திருத்துழாயை எவ்வகையிலும் பிறர்க்கு ஆக்கான். 'அடியார்க்குப் பரதந்திரப்பட்டவன்’ என்பதற்குக் காட்டும் சம்வாதம் : *ஒ நீண்ட கையையுடைய அநுமனே, மகாத்மாவாகிய பூரீராமனுக்கும் அவருடைய தம்பிமாருக்கும் அந்த அரச குலத்திற்கும் பிராணனானது என் அதீனமாக இருக் கிறது" என்றாள் என்றது என் சொல்லியவாறோ எனின்: தம்மையும் தம் உடைமையையும் எனக்கு ஆக்கியவர் என்பதனைக் கூறியபடி. இதுதான் தன் சுபாவம் கொண்டு சொல்லுகிறாள் அல்லள்; அவருடைய «* t_1 fr @j அது சந்தானத்தாலே சொல்லுகின்றாள். அவருடைய சுபாவமாவது, கிருபையும் காதலும், 50. ரீ ராமா. சுற். 37:37,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/446&oldid=921264" இலிருந்து மீள்விக்கப்பட்டது