பக்கம்:வைணவ உரைவளம்.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 4?5 'தீவினையேன் வளர்த்த' என்பதற்கு நெஞ்சைத் தொடும்படியான (மர்மஸ்பர்ஸியான) பொருளை நம் பிள்ளை வெளியிட்டருள்வதைக் காணிர்: "என்னுடைய பாபம் இருந்தபடி பாருங்கோள்; அவனும் நானும் கூட விருந்து உங்களைக் கொண்டாடுகையன்றிக்கே உங்களைக் கொண்டு காரியம் கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன். வயிற்றில் பிறந்தாரை இடுவித்துக் காதலனை (அபிமதனை) அழைத்துக் கொள்ளுதலைப் போன்ற புன்மை இல்லையே' என்பதாக. 198 ஞாலத் தூடே கடந்தும் கின்றும் கிடந்திருந்தும் சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே! கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?5' (ஞரலத்துள்டே-பூமியில்; சால பலநாள்-பல்லா யிர மாண்டளவும்; கோலம்-அழகு; திருமா மகள்-பெரிய பிராட்டியார்; கூடாதேகிட்டியநுபவிக்கப் பெறாமல்; தளர்வேனோஇழந்து துடிப்பேனோ] கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுவதாக அமைந்த திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். * யுகங்கள் தோறும் பூலோகத்திலே நடந்தும் நின்றும் இருந்தும் கிடந் 53. திருவாய். 6.9:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/448&oldid=921266" இலிருந்து மீள்விக்கப்பட்டது