பக்கம்:வைணவ உரைவளம்.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 வைணவ உரைவளம் கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுவதாக அமைந்த திருவாய் மொழியில் இஃது ஒரு பாசுரம். மனம் கலங்கும் படியாக ஐந்து இந்திரியங்களும் வருத்துகின்ற பலவகை யான சிற்றின்பத்தை எனக்குக் காட்டிப் பாவியேனை அழிக்க நினைக்கின்றாயோ? பூலோகத்தை அளந்து கொண்ட தாமரை போன்ற திருவடிகட்கு அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ?’ என்கின்றார் ஆழ்வார். பல கீ காட்டிப் படுப்பாயோ : இரட்சகனான நீ காட்டி முடிக்கப் பார்க்கிறாயோ? நாட்டார் காணாவிடில் பிழையோம்' என்று இருக்கிற விஷயம் இவர்க்குக் கண்ட மாத்திரத்திலேயே மோகிக்கும் படியாக இருக்கின்ற தன்றோ? ஆகையால் காட்டிப்படுப்பாயோ' என்கின்றார். அசுணமா என்று சில பறவைகள் உள்ளன; அவை பிடி கொடா ஒன்றுக்கும்; அவற்றைப் பிடிக்க நினைத்தார் முற்படப் பாடுவார்கள்; அது கேட்டு நெஞ்சு நெகிழும்; பின்பு பறையை அடிப்பார்கள்; இதன் வன்மையாலே பட்டுக் கிடக்குமாம். அது போலே, இவர் பகவத் குணங் களிலே நைந்தபடி. இதர விஷயங்களைக் கேட்ட அளவிலே முடியும்படி ஆனார். நெடுநாள் அநுபவித்துப் போந்தா லும், கடக்க இருந்த அன்று நாம் இன்னது அநுபவித் 60. மறக்கும் பதங்தியும் சேலும் அசுணமும் வண்டினமும் பறக்கும் பதக்தமும் போல்ஐவ ராற்கெடும் பாதகனே என்பது திருவேங்கடத் தந்தாதி.28. அசுண மாவைப் பறவை என்பர் ஒரு சாரார்; விலங்கு என்பர் மற்றொரு சாரார். பறை பட வாழா அசுணமா என்பது நான்மணிக் கடிகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/451&oldid=921270" இலிருந்து மீள்விக்கப்பட்டது