பக்கம்:வைணவ உரைவளம்.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 435 மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே! ஒரு சாதன அநுஷ்டானத்தைச் செய்யாதிருத்துங்கூட, உனது திருவடி களைக் காண்பதற்குக் கண நேரமும் ஆற்றமாட்டேன்' என்கின்றார். இமையோர் அதிபதியாய், கொடியா அடுபுள் உடை யானாய், செடியார் வினைகள் தீர்மருந்தாய், திருவேங் கடத்து எம்பெருமானாய், கோலக்கணிவாய் பெருமானாய் அடியேன் மேவி அமர்கின்ற அமுதே' என்று அந் வயித்துப் பொருள் கண்டால் பரத்துவத்தைச் சொல்லி, விரோதி களை அழிப்பதற்கு உறுப்பான பரிகாரத்தைச் சொல்லி, விரோதி நிரசனத்தைச் சொல்லி, செளலப்பியத்தைச் சொல்லி, அழகைச் சொல்லி இனியனாய் இருக்கின்றான் என்பது புலனாகும். ‘அடியேன்......அமுதே இங்கு ஒர் ஐதிகம். பட்டர், : நித்தித்யதிலே' (உடையவரால் அருளிச் செய்யப்பெற்ற நூல்) அமுது செய்யப்பண்ணும்போது தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது என்று இருக்கிறதே, என்ன தோத் திரத்தை விண்ணப்பம் செய்வது?' என்ன, அடியேன் மேவி அமர்கின்ற அமுதே பச்சைமாமலைப்போல் மேனி' (திருமலை-2) என்பனபோலே இருக்கும் திருப்பாசுரங் களை விண்ணப்பம் செய்வது' என்று அருளிச் செய்தார். 202 'அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்யா! நிகரில் புகழாய் உலகம்மூன் றுடையாய்! என்னை ஆள்வானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/458&oldid=921277" இலிருந்து மீள்விக்கப்பட்டது