பக்கம்:வைணவ உரைவளம்.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 வைணவ உரைவளம் கிகளில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல்ஒன் றில்லா அடியேன்உன் அடிக்கீழ் அமர்ந்து புகுக்தேனே. (இறை-கணநேரம்; அக )ெ கில்லேன்-பிரிந் திருக்கமாட்டேன்; நிகர் இல்-ஒப்பற்றதான: முனிக்கணங்கள்-மகரிஷி சமூகங்கள்; புகல்வேறு வழி; புகுந்தேன்-சேர்ந்தேன்) திருவேங்கடமுடையானது திருவடிகளில் சரணம் புகுவ தாக அமைந்த திருவாய்மொழியில் உள்ள இப்பாசுரம் பிர பத்திநெறியை சூத்திரம்போல் விளக்குவது. இதில் ஆழ்வார், சிறிது நேரமும் விட்டுப் பிரியேன் என்று பெரிய பிராட்டியார் நித்திய வாசம் செய்கின்ற திருமார்பினை யுடையவனே! ஒப்பில்லாத புகழையுடையவனே! மூன்று உலகங்களையும் உடையவனே! என்னை ஆள்கின்றவனே! ஒப்பில்லாத நித்திய சூரிகளும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்புகின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற வனே! வேறு கதி ஒன்றும் இல்லாத அடியேன் உனது திருவடியிலே பொருந்தி அடைந்தேன்.' என்கின்றார். இங்கு நிகரில் புகழாய்' என்பதால் வாத்சல்யமும், உலகம் மூன்று உடையாய் என்பதால் சுவாமித்துவமும், என்னை ஆள்வானே' என்பதனால் செள சீல்யமும், நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே' என்பதால் செளலப்பியமும் தெரிவதாகப் பெரியோர் பணிப்பர். அகலகில்லேன்.........உறைமார்பா: இதனால் புருஷ கார பூதையான பிராட்டியும் ஈசுவரனுமான இருவ 65. திருவாய், 6:10:7 (சரணாகதி தத்துவத்தை அற்புத மாக விளங்கும் பாசுரம், பிரபத்தி நெறியின் உயிராய பாசுரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/459&oldid=921278" இலிருந்து மீள்விக்கப்பட்டது