பக்கம்:வைணவ உரைவளம்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 487 ருடையவும் சேர்த்தியானது எப்போதும் உண்டென்று காட்டப்பட்டதாகும். இதனால் எந்தச் சமயத்திலும் எம்பெருமானை அடைக்கலம் புகலாம் என்பது தேறி நிற்கும் பிராட்டியின் புருஷகாரம் அவசியம் வேண்டிய தென்பதை அவதார காலத்துச் செய்தியாலும் தெரிந்து கொள்ளலாம். இராமாவதாரத்தில் அளவு கடந்த அபராதத்தைச் செய்து நான்முகன் கணைக்கு இலக்காய்த் தலையறுப்புண்ண வேண்டிய காகம் கிருபைக்கு இலக்காய்த் தலை பெற்றுப் போனது பிராட்டி அருகிருந்த தனாலேயாகும். அவ்வளவு அபராதி அல்லாத இராவணன் இராமனது அம்புக்கு இலக்காய் முடிந்து போனது இவளது சந்நிதி இல்லாமையினாலேயாகும். இந்தச் சிறப்புப் பொருள்களெல்லாம் ஈட்டில் மிக அருமையாக அருளிச் செய்யப் பெற்றவை. ஒருநாள் பட்டர் பிள்ளையழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச் செய்கைக்காக எல்லோரும் செல்லுங்கோள்' என்ன, நஞ்சீயரும் எழுந்து சென்று போய், நம்மை இராய் என்று அருளிச் செய்திலர் என்று வெறுத்திருக்க, அப்பொழுதே சீயர் எங்குற்றார்?' என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக் கொண்டிருந்த துவயத்தை அருளிச்செய்கையில் அருளிச்செய்தவார்த்தை' என்று சீயர் அருளிச் செய்வர். இது தொடங்கி ஈட்டில் வரும் பூரீசூக்திகள் சேவிக்கத் தக்கவை. ஏழாம் பத்து 2Ο3 உண்ணிலாவிய ஐவ ரால்குமை தீற்றி யென்னையுன் பாதபங்கயம் கண்ணிலா வகையே கலிவா னின்ன மெண்ணு கின்றாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/460&oldid=921280" இலிருந்து மீள்விக்கப்பட்டது