பக்கம்:வைணவ உரைவளம்.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 வைணவ உரைவளம் கின்றவனே! நெஞ்சில் இருக்கின்றவனே! சொல்லில் இருக் கின்றவனே! நித்திய சூரிகளுக்குப் பெருமானான சர்வேசு வரனுக்கு அடிமை செய்கின்ற வைந்தேயன் முதலாயி னோரையும் இந்த உலகத்தில் வருத்துகின்ற ஐம்புலன்க ளாகின்ற இவை என்னைப் பெற்றால் என்ன காரியத்தைச் செய்யமாட்டா; அதற்குமேல் நீயும் கைவிட்டால் அவை என்ன செய்யமாட்டா; ஆதலால், என் தளர்ச்சி தீரும்படி ஒரு வார்த்தை அருளிச்செய்ய வேண்டும்' என்கின்றார். சுவர்க்கலோகவாசிகளான இந்திராதி தேவர்களைக் கொள்ளலாம்; பரமபதவாசிகளான கருத்மான் முதலிய நித்திய சூரிகளைக் கொள்ளவுமாம். இரு வகுப்பினர் விஷய மாகவும் இரண்டு இதிகாசங்களை ஆசாரியர்கள் எடுத்துக் காட்டி இப் பொருளை மூதலிக்கின்றார்கள். முதல் இதிகாசம்: நரகாசுரன் என்பவன் பிராக் ஜோதிஷம் என்னும் நகரிலிருந்துகொண்டு எல்லாவகை உயிர்களையும் நலிந்து தேவர் சித்தர் கந்தர்வர் இவர்தம் கன்னிசைகளையும் பற்பலரை வல்லந்தமாய்க் கடத்திக் கொண்டுபோய் தான் மணம் புணர்வதற்காகக் கருதித் தன் மாளிகையில் சிறை வைத்தான். வருணனது கொடை யையும் மந்திரகிரி சிகரமான இரத்தின பர்வதத்தையும் தேவ மாதாவான அதிதி தேவியின் குண்டலங்களையும் கவர்ந்து போனதுமன்றி இந்திரனுடைய ஐராவத யானை யையும் அடித்துக்கொண்டு போகச் சமயம் பார்த்திருந் தான். இதனைக் கண்டு அஞ்சி வந்து பணிந்து முறையிட்ட இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க கண்ணபிரான் கருடனை வரவழைத்து சத்தியபாமையுடன் கருடன் மேலேறி அந் நகரை யடைந்து எதிர்த்து வந்த நரகனுடன் போர் தொடுத்து நரகனைக் கொன்றான். அதன் பின்னர் அவன் பல திசைகளிலிருந்து கொண்டுவந்து சிறைப்படுத்தி யிருந்த பதினாயிரத் தொருநூறு கன்னிகையரையும் ஆட்கொண் டான், நரகனால் அதிதியிடமிருந்து கவரப்பட்ட குண்டலங் களை அவளடம் தரும்பொருட்டு சத்தியபாமையுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/463&oldid=921283" இலிருந்து மீள்விக்கப்பட்டது