பக்கம்:வைணவ உரைவளம்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 443 நோக்கி, தேவரீரே அவருக்கு அமிர்தத்தையும் ஆயுளை யும் தந்தருள்க' என்று கூற, திருமால் சகல உலகங்களின் அதிபதியான நீ கொடுப்பதே போதும், அதனை மாற்று பவர் யார்?' என்று சொல்ல, பிறகு இந்திரன் சுமுகனுக்கு அமுதம் உண்பியாமல் நீண்ட ஆயுளை வரமாக அளிக்க உடனே மாதலி சுமுகனுக்குத் தன் மகளை மணம் புரிவித் தான். இச்செய்தியைச் செவியுற்ற பெரிய திருவடி மிக்க சினங்கொண்டு இந்திரனுடன் மாறுபட்டு, தனது இரையை அவன்தடுத்து விட்டதற்காகப் பலப்பல கடுமையான சொற் களைக் கூறுகையில் சுமுகன் தான் நீண்ட ஆயுளை வர மாகப் பெற்றிருந்தாலும் கருடனுடைய கறுவுதலைக் கண்டு அஞ்சிப் பாம்பு வடிவாய்த் திருமாலினருகிற் சேர்ந்து அப்பெருமானது கட்டிலின் காலைக் கட்டிக் கொண்டு சரண் புகுந்தான். பின்பு கருடன் திருமாலை நோக்கி, *சகல தேவர்களினுள்ளும் மகா பலசாலியான உன்னைச் சிறிதும் சிரமமின்றி இறகு முனையாற் சுமக்கின்ற என்னி னும் வலிமையுடையார் யார்? இதனைச் சற்று ஆலோ சித்துப் பார் என்று செருக்கிப் பேச, அக்கடுஞ் சொற் கேட்ட திருமால் கருடனை நோக்கி, மிகவும் துர்ப்பல னான நீ உன்னைத்தானே மகா பலசாலியாக எண்ணி எனது முன்னிலையில் தற்புகழ்ச்சி செய்து கொண்டது போதும்; மூவுலகமும் எனது உடம்பைச் சுமக்க முடி யாவே, யானே எனது ஆற்றலால் என்னைச் சுமந்து கொண்டு உன்னையும் சுமக்கின்றேன். எனது இந்த வலக்கையொன்றை மாத்திரமாவது நீ தாங்கவல்லை யாகில் உனது செருக்கு மொழி பயன்பட்டதாகும்’ என்று சொல்லி கருடனது தோளில் தனது வலக்கையை வைத்த மாத்திரத்தில் அவன் அதன் பாரத்தைத் தாங்க மாட்டாமல் வருந்தி வலிமையொழிந்து மூர்ச்சித்து விழுந்து, பின்னர் அரிதில் தெளிந்து திருமாலை வணங்கிப் பலவாறு பணிமொழி கூறி, என் பிழையைப் பொறுத் தருள வேண்டும்' என்று வேண்ட, திருமால் திருவுள்ள மிரங்கி அவனுக்குச் சமாதானம் கூறித் தனது திருவடியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/466&oldid=921286" இலிருந்து மீள்விக்கப்பட்டது