பக்கம்:வைணவ உரைவளம்.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 44 வைணவ உரைவளம் பெரு விரலால் சுமுகனை எடுத்துக் கருடனின் தோளிலிட்டு இவனை நீ உன் அடைக்கலமாகக் கொண்டு பாதுகாக்கக் கடவை என்று குறிப்பிக்க, அதுமுதல் கருடன் சுமுகனோடு நட்புக் கொண்டு அவனைத் தோளில் தரிக்க, அவனும் அச்சமின்றிக் கருடா, சுகமா?' என்று நலம் விசாரிப்பவனா யினான்!-என்பதாம். நித்திய சூரிகளில் ஒருவனாகிய கருடனையும் தன் முனைப்பு விட்டபாடில்லை. 2O5 கங்குலும் பகலும் (அவதாரிகை) . இது திருத்தாயார் பாசுரமாகச் செல்லுகின்றது. பராங்குச நாயகியைப் பெரிய பெருமாள் திருவடிகளிலேயிட்டு வைத்துக் கொண் டிருந்து இவள் அழுவது, தொழுவது, மோகிப்பது, பிரலா பிப்பது, அடைவுகெடப் பேசுவது, நெடுமூச்செறிவது, அதுவும் மாட்டா தொழிவது முதலியவற்றை ஒவ்வொன் றாக எடுத்துச் சொல்லி, இவள் திறத்தில் நீர் என்ன செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கின்றீர்?' என்று கேட்கின்றபடியாய் அமைந்துள்ளது. இப்படி இருக்கின்ற இவருடைய ஆர்த்தியைக் காட்டு கின்ற இத் திருவாய்மொழிக்குப் பொருள் கரை மேலே 4. இச்சரிதப் பகுதியை, "நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்துகின் சரனெனச் சரணா கெஞ்சில் கொண்டுகின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்துஅருள் செய்த தறிந்தும்' என்னும் பெரிய திருமொழிப் பாசுரத்தால் (5.8:4) உணர்தல் தகும். 5. திருவாய். 7.2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/467&oldid=921287" இலிருந்து மீள்விக்கப்பட்டது