பக்கம்:வைணவ உரைவளம்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 44ገ திருவாய்மொழியில் ஒரு பாசுரம். என் திருமகள் சேர்ந் திருக்கின்ற மார்பையுடையவனே! என்பாள்; என்னுடைய உயிரே! என்பாள்; உன்னுடைய அழகிய கோரப் பல்லினால் இடந்து எடுத்து உன் காதலுக்குரியவளாகக் கொண்ட பூமிப் பிராட்டிக்குக் கணவனே! என்பாள்; கிருஷ்ணாவதா ரத்தில் அஞ்சத் தக்க இடபங்கள் ஏழனையும் தழுவி உன் காதலுக்கு உரியவளாகக் கொண்ட நப்பின்னைப் பிராட் டிக்கு அன்பனே! என்பாள்; அழகிய திருவரங்கத்தைக் கோயிலாகக் கொண்டவனே. இவளுடைய துயரத்திற்கு முடிவு அறிகின்றிலேன்' என்று திருத்தாயார் தன் மகள் நிலையை எடுத்துரைக்கின்றாள். இப்பாசுரத்தில் மூன்று ஐதிகங்கள் காட்டப்பெறு கின்றன. ஐதிகம்.1 : "என் திருமகள் மார்பனே என்னும்': என்பேற் றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ என்னும், என்" என்பது திருமகளுக்கு அடைமொழி மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது. என்' என்பதைத் திருவுக்கு அடைமொழி ஆக்கினதற்கு ஒரு சம்வாதம் காட்டுகின்றார். 'அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை என்திருமகள்' என்று திருநாமம் சாத்தினான்' என்பது ஈடு. சேர்மார்பன்: என்பது நிகழ்கால வினைத்தொகையாலே இரகஸ்யத்தில் (மந்திர ரத்தமாகிய துவயத்தில் ரீமந் நாராயண' என் பதைத் திருவுள்ளம் பற்றி) நித்தியயோகத்தைச் சொல்லு கிறது: என்றது, அவள் ஒரு கணம் பிரிய இருக்கில் அன்றோ எனக்குப் பேறு தாழ்க்க வேண்டுவது?" என்கின்றாள் என்றபடி, ஐதிகம்-2 : பட்டர் பெருமாளிடத்தில் அடியேனை *ஸ்திரீதனமாகப் பிராட்டிக்கு வந்தவன்" என்று திருவுள்ளம் பற்றவும்; நானும் இவர் எங்கள் நாச்சி யார்க்கு நல்லர் என்று, அவ்வழியே அழகிய மணவாளப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/470&oldid=921291" இலிருந்து மீள்விக்கப்பட்டது