பக்கம்:வைணவ உரைவளம்.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 வைணவ உரைவளம் இவருக்கு இல்லையே என்ன, அஃது அங்ங்ன் அன்றுகாண்; கழுத்திலே ஓலைகட்டித் துரதுபோ' என்பார் இல்லாமை யாலே தவிர்ந்தார் அத்தனை காண்' என்று அருளிச் செய் தார். நாடுடை மன்னர் வேறே சிலர் இலரே. முடி சூடிய இட்சுவாகு குலத்திலே பிறக்கையாலே போக விடுவாரைப் பெற்றது இல்லை. முடியைத் தவிர்ந்து சடையைப் புனைந்து நாட்டினை விட்டுக் காடு ஏறப் போனவர் தூது போகாமை இல்லை அன்றோ? 2 ዝ ዝ கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல் லால்மற்றும் கேட்பரோ, கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளேவையும் சேட்பால் பழம்பகை வன்சிசு பாலன், திருவடி தாட்பால் அடைந்த தன்மை யறிவாரைத் யறிந்துமே?33 (கேட்பார்-கேட்க விரும்புகிறவர்கள்; கீர்த்தி - புகழ், செவி சுடு-கர்ண கடுரமான; கீழ்மை. தண்ணிய, சேண்பால் பழம் - நெடுங் காலத்து; திருவடி-சுவாமி: தாள்-திருவடி1 எம்பிரானது விபவ.அவதார குணங்களை அநுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குவதாக அமைந்த திருவாய் மொழியில் ஒரு பாகரம். இதில், பகவானைப் பற்றிய நிந்தை மொழிகளைக் கேட்கவேண்டும் என்னும் விருப்பமுடையவர்களுடைய செவிகளையும் சுடக் கூடிய தாழ்ந்த வசைச் சொற்களையே பேசிய, பல காலமாக 33. திருவாய். 7.5:3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/481&oldid=921303" இலிருந்து மீள்விக்கப்பட்டது