பக்கம்:வைணவ உரைவளம்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 461 "மார்க்கண்டனைப் பற்றிய இதிகாசம்': மிருகண்டு என்னும் முனிவர் மக்கட்பேறு இல்லாக் குறையால் நான் முகனைக் குறித்து தவம் செய்தபோது, நான்முகன் அவன் முன்தோன்றி, முனிவரே! அறிவில்லாமையும் உறுப்புக் குறையும் பெரும் பிணியும் தீயகுணங்களும் உடையனாய் நூறாண்டு உயிர் வாழ்பவனான மகனை விரும்புகின்றீரோ? அன்றிக் கூரிய அறிவும் அழகு பொலிந்த வடிவமும் உடல் நலமும் நற்குணமு முடையனாய்ப் பதினாறு வயதே வாழ்பவனான மகனை விரும்புகின்றீரோ? சொல்லும்' என்றார். முனிவர் குறைந்த ஆயுளும் நிறைந்த அறிவும் அழகும் குணமும் சிறந்து பிணியிலனாகும் ந ன் மகனையே வேண்டுகின்றேன்' என்று பதிலிறுத்தார். நான்முகக் கடவுள் அவ்வாறே வரம் அளித்தனர், இங்ங்ணம் ஊழ்வினையால் பதினாறு வயது ஆயுள் பெற்றுப் பிறந்த நன்மகனான மார்க்கண்டேயன் தன் குறைந்த ஆயுளைப்பற்றி வருந்திய தாய் தந்தையரைத் தேற்றித் தான் விதியைக் கடந்து வருவதாகச் சொல்லி, நிறைந்த ஆயுள் பெறும்பொருட்டு நாடோறும் சிவபூசை செய்து வந்தான். ஒருநாள் யமன் தூதரை அனுப்பினான்; அவர்கள் மார்க்கண்டேயனின் தவக் கனலால் அவனை அணுகமுடியாமல் அவன் செய்து வரும் சிவபூசையின் சிறப் பைக் கண்டு வெருவியோடி யமனிடம் வந்து செய்தி சொல் லினர். யமனும் கோபித்துக் கொண்டு தனது மந்திரியான காலனை ஏவ, அவன் வந்து நயபயங்களால் அழைக்கவும் மார்க் கண்டேயன் வரமுடியாது என்று சொல்லிவிட்டான். பிறகு யமன் தானே நேரில்வந்து மார்க்கண்டேயனைக் காலபாசத்தால் கட்டி இழுக்கத் தொடங்குகையில் கம்முனி குமரன் சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டான். யமன் சிவலிங்கத்தையும் சேர்த்து வலிந்து இழுக்கும்போது சிவபெருமான் சீமந்நாராயணனைச் சிந்தை செய்து அவன் திருவருள் பெற்று அங்கு நின்றும் வெளிப்பட்டுக் காலனைக் காலால் உதைத்துத் தள்ளி முனிமகனுக்கு என்றும் பதினாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/484&oldid=921306" இலிருந்து மீள்விக்கப்பட்டது