பக்கம்:வைணவ உரைவளம்.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 வைணவ உரைவளம் 2T6 ஆணியைக் காண்பரி யாய்அரி காண்கரி யாய், அரக்கர் ஊளையிட் டன்றிலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப மீளியம் புள்ளைக் கடாய்விறல் மாலியைக் கொன்று,பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த் தானையும் காண்டும்கொலோ?4' |யாளி-மிருக விசேடம்; பரி-குதிரை; அரிசிங்கம்; ஊளையிட்டு-கதறிக் கொண்டு; கடந்து-விட்டு: பிலம்-பாதளம்; மீளிமிடுக்கு; புள்-கருடன்; கடாய்-நடத்தி: விறல்-வலிய, அடர்த்தானையும்-அழித்த பெருமானையும்; காண்டும் கொல்-காணப் பெறுவோமோர் எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைப்பதாக அமைந்த திருவாய்மொழியிலுள்ள ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், யாளியைக் கண்ட குதிரை போலவும், சிங்கத்தைக் கண்ட நரி போலவும் ஆகி அரக் கர்கள் கதறிக்கொண்டு, அக்காலத்தில் இலங்கையை விட்டுப் பிலத்திலே சென்று மறைய, வலிய அழகிய கருடப் பறவையை நடத்தி வலிமையான மாலி என்றவனைக் கொன்று குவித்த சர்வேசுவரனையும் காணக்கூடுமோ?" என்கின்றார். அரக்கர், ஊளையிட்டு. ஆளுயர் குன்றங்கள் செய்து: இதில் அடங்கிய இதிகாசம் இந்நூல் பாசுரம்-83 இல காண்க. 41. திருவாய் 7, 6: 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/491&oldid=921314" இலிருந்து மீள்விக்கப்பட்டது