பக்கம்:வைணவ உரைவளம்.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 வைணவ உரைவளம் தன்னோடு ஒக்க ஞானம் சக்தி முதலாயினவைகளை யுடையேனாம்படி செய்து, தன்னாலே சக்தியைப் பெற்ற வனான என்னாலே, வேதங்கள் ஸ்மிருதிகள் இதிகாசங்கள் முதலானவைகட்கும் அறிய முடியாதவனாக இருக்கிற தன்னை, என்னைக் கொண்டு பாடுவித்தான். நான் கவி பாடுகைக்குக் காரணமாய் நின்றான்; அவன் அடியாகக் கவி பாடினேன். பிடாத்தை (போர்வையை) விழவிட்டுத் தன் வடிவழகைக் காட்டினான். திருத்திரை எடுத்தாற், கூப்பிடுமாறுபோல் கூப்பிட்டேன்; அது கவியாய்த் தலைக் கட்டிற்று. இப் பாசுரத்திற்கு ஐதிகம் இதற்கு ஆளவிந்தார் அருளிச் செய்யும்படி : சர்வேசுவரன் செய்யப் புக்கால் அரியதும் ஒன்றும் உண்டோ?' என்றாகும். அங்ங்ன் அன்றிக்கே, எம்பெருமானார், இவர்தாம் சொன்னாராகி லும் ஒரு படி போகச் சொல்லித் தலைகட்டுவர்; அவனும் தானே சொன்னானா கில் ஒரு குற்றமும் இல்லாதபடி தலைக் கட்டுவான்; சிறு குழந்தை எழுதிடப்புக்கால் தானே ஏதேனும் ஒரு படி இட்டுத் தலைக் கட்டும்; தந்தையாதல் உபாத்தியாயனாதல் இடப்புக்கால் தானே எழுத்தாய் இருக்கும்; அங்ங்ன் அன்றிக்கே, இவன் கையைப் பிடித்து இடுவிக்கப்புக்கவாறே, இவன் ஒரிடத்தே இழுக்கக் குதறிக் கொட்டியாய் உருவம் அழிந்து சிதறிப்போம்; அப்படியே என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தேயும், என்னால் வரும் குற்றம் தன்பக்கல் தீண்டாத படி பாடுவித்தான் என்கின்றார்' என்று அருளிச் செய்வர். 218 என்சொல்லி நிற்பன்? என் இன்னுயிர் இன்றுஒன்றாய் என் சொல்லால் யான்சொன்ன இன்கவி என்பித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/493&oldid=921316" இலிருந்து மீள்விக்கப்பட்டது