பக்கம்:வைணவ உரைவளம்.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 4ገ? தாமரைகளை என்னுடைய நெஞ்சத்திலே இருத்தி எப்பொழுதும் வணங்கும்படியாக, அடியார்கள் பலர் முன்பு செய்த பாம்பணையப்பன் மனம் பொருந்தி எழுந் தருளியிருக்கின்ற பூக்கள் நிறைந்த அழகிய ஓங்கின மாடங் களையும் நீண்ட மதிள்களையுமுடைய திருவாறன்விளை (இப்பொழுது ஆரமுல்லா' என வழங்குகின்றது; கேரள மாநிலத்தில் செங்கன்னுார் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 25 கி. மீ. பேருந்து வசதி உண்டு) என்னும் திவ்விய தேசத்தினது உலகம் எங்கும் நிறைந்த புகழை நாம் பாட. நம்பிடத்திலுள்ள வினைகள் ஒன்றும் நில்லாமல் கெட்டு விடும்' என்கின்றார். 'பலரடியார் முன்பு அருளிய' : இங்கு ஆழ்வானுடைய அற்புதமான இதிகாசம் ஒன்று ஈட்டாசிரியரால் காட்டப் பெற்றுள்ளது. அது இது: அக்காலத்தில் அரசோட்சி வந்த சோழ மன்னன் வைணவத்தை வெறுப்பவன்; அவன் ஆங்காங்குள்ள திருமால் சிலைகளை எடுத்து எறிந்துவிட முயன்றபோது அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் மந்திர பூர்வமாகச் செய்யப்பெற்ற திருமால் சிலைகளை அழியச் செய்தால் ஊருக்குப் பெருந் தீங்கு விளையும்" என்று சொல்லவே, அதுகேட்ட அரசன் அந்தப் படிமங்களின் தெய்வ சக்தியை உத்வாசனம் பண்ணியழியச் செய்வோம் . என்று நிச்சயித்து ஒரு பிராமணனுக்குச் செல்வம் தந்து அவனுக்கு அப்பணியை இட்டான். அவனும் திவ்விய தேசங்களுக்குச் சென்று உத்வாசனம் பண்ணி பகவத் திருமேனிகளைக் கடலில் எடுத்தெறியும் செய்தி எம் பெருமானார்க்கு எட்டியது. நாம் நெடுநாளாக திருவரங் கம் பெரிய கோயிலை விடாது நோக்கிக் கொண்டு வருகின் றோம்; இவ்விடத்திற்கு அழிவு வரும்படி ஆசுர வர்க்கம் மேலிடா நின்றது; இனிமேல் செய்ய வேண்டுவதென்ன?” என்று வருத்தமெய்தி பெரிய நம்பியுடன் சிந்தித்திருக்க: "நான் பெருமாளுடைய திருவெல்லையிலே ஒரு பிரதட் சிணம் வரும்படியாக உம்முடைய சீடர்களில் ஒருவரை என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/500&oldid=921325" இலிருந்து மீள்விக்கப்பட்டது