பக்கம்:வைணவ உரைவளம்.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 483 சொல் எந்த இடத்திலும் தேக விசிஷ்டனான ஆன்மா வையே சொல்லி நிற்கும் என்பது திண்ணமாயிற்று. ஒரு வன் அடியேன் உள்ளானே' (8.8:1) என்ற கீழ்ப் பாசுரத்தி லும் அப்படியே கொள்ளல் வேண்டும். ஆனால் அடியேன் உள்ளான், உடல் உள்ளான்' என்ற இவ்விடத்தில் மாத்திரம் அடியேன்” என்பதற்கு வெறும் ஆன்மாவே பொருளாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஆன்மாவிற்கு விசேஷ பூதமான தேகத்திற்கு வாசகமான சொல் உடல்" என்பது தனிப்பட இருப்பதனால் அடியேனில் தேகத்தைச் சேர்த்துப் பொருள்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எம்பெருமான் சீவான்மாவையும் உடல் பொருளையும் உட்பிரவேசித்திருப்பவன் என்று சொல்லவேண்டுவது ஈண்டு விரும்பப்பட்டது. உடல உள்ளான் என்பதனால் சடப் பொருளை உட்பிரவேசித்திருப்பவன் என்பது சொன்ன தாக ஆயிற்று. சீவான்மாவை உட்பிரவேசித்திருப்பவன் என்று சொல்ல விரும்பப்பட்ட பொருளுக்கு அடியேன் உள்ளான்” என்று வாசகமிடப்பட்டுள்ளது. ஆன்மா நான்' என்ற பொருளையுடையதாகையாலே என் உள்ளான்' என்று சொல்லியிருக்கலாம்; அப்போதும் 'ஆன்மாவில் உள்ளான்” என்னும் பொருள் தேறிவிடும்; ஆனால் ஆழ்வார் அப்படி அருளிச் செய்யாமல் அடியேன் உள்ளான்" என்று அருளிச் செய்திருக்கையாலே ஆன்மா என்றும், அடியேன் என்றும் பரியாயம் என்பது ஆழ்வார் திரு வுள்ளம் என்று அறுதியிடலாகின்றது. இந்த மருமம் குருகுலவாசப் பேறு இல்லாதார்க்கு அறிவரிது. திருக்கோட்டியூர் நம்பி ஆளவந்தார் பூரீபாதத் தில் கேட்ட மகா அர்த்தம் இது. இஃது ஆழ்வான் வழியாக எம்பெருமானார்க்கு நிதிபோல் கிடைத்தபடி யால் இந்த மகா அர்த்தம் திருவுள்ளத்திலே ஊறியிருந்து கீதாபாஷ்யத்தில் (7:18) வெளியிடப் பெற்றது. இங்கு அடியேன் உள்ளான்' என்றது ஆழ்வாரது ஆன்மாவில் வியாபித்தவன் என்றும், உடல் உள்ளான்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/506&oldid=921331" இலிருந்து மீள்விக்கப்பட்டது