பக்கம்:வைணவ உரைவளம்.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 வைணவ உரைவளம் என்றது அவரது உடலிலும் வியாபித்துள்ளான் என்றும் பொருள்படுகின்றது. அண்டத்தகந்தான் புறத்துள்ளான்" என்பதனால் அண்டத்துக்குட்பட்ட பொருள்களோடும் வெளிப்பட்ட பொருள்களோடும் வாசியற (வேறுபாடு இன்றி) எங்கும் உள்ளான் என்று பொருள்படுகின்றது. இதனை இன்னபடி என்று உரைக்கலாம்படி அல்லன்' என்றும் பொருள் தரும். பரம்பிரன் - மேலானவற்றுக் கெல்லாம் மேலானவன், ஆனந்தமே வடிவானவன். 224 "நெடுமாற்கடிமை'2 (அவதாரிகை) : அநந் யார்க சேஷத்துவத்துக்கு: எல்லை நிலம் அவன் அடியார்க்கு அடிமையாதல். பாகவத கைங்கரியமே புருஷார்த்தம் என் பதில் நோக்கு இத் திருவாய் மொழிக்கு. இதற்கு ஈட்டா சிரியர் காட்டும் ஐதிகம். அம்முனி ஆழ்வான் போசனராச்சி யத்தினின்றும் வந்த நாளிலே, பட்டர் கண்டருளி நீ பூரீவைஷ்ணவர்களுக்குப் போர அடிமை செய்து போந்தாய் என்று கேட்டோம்; உன் தன்மைக்குச் சேர நெடுமாற்கு அடிமை' என்னும் திருவாய் மொழியைக் கேள்' என்று என்று அருளிச் செய்தாராம். 225 உறுமோ பாவி யேனுக்கிவ் வுலகம் மூன்றும் உடன் கிறைய சிறுமா மேனி கிமிர்த்தனன் செந்தா மரைக்கண் திருக்குறளன் 2. திருவாய். 8.10 3. அநந்யார்க சேஷத்துவம்-பிறர்க்குப் பயன்படாத அடிமை நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/507&oldid=921332" இலிருந்து மீள்விக்கப்பட்டது